உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சென்னை மண்ணடி பகுதியில் உள்ள தங்க விநாயகர் கோவிலில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்த திரவுபதி அம்மன். தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடந்தது. இடம்: லிங்கு செட்டி தெரு.

24-06-2024 | 03:17


மேலும் இன்றைய போட்டோ

நடிகர் சிவாஜி பிறந்த நாளை முன்னிட்டு இ.சி.ஆரில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன்,மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

01-10-2025 | 16:22


ஆயுத பூஜையை முன்னிட்டு சட்டசபையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் முதல்வர் ரங்கசாமி சரஸ்வதி படம் வைத்து பூஜை செய்தார். அருகில் துணை சபாநாயகர் ராஜவேலு மற்றும் ஊழியர்கள்.

01-10-2025 | 16:22


விழுப்புரம் அ.தி.மு.க ,கட்சி அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.

01-10-2025 | 16:21


சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு விசைப்படகில் ஆழ் கடலில் பிடித்து வரப்பட்ட 380 கிலோ எடை கொண்ட ராட்சத கோலா மீன்.

01-10-2025 | 16:21


ஆயுத பூஜையை யொட்டி பாடி காட்டு முனீஸ்வரர் கோவிலில் வாகனங்களுக்கு பூஜை செய்து வழிபட்டனர்.

01-10-2025 | 16:21


விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள தற்காலிக பட்டாசு கடைகளை ஆர்.டி.ஓ., விஷ்ணு பிரியா ஆய்வு செய்தார்.

01-10-2025 | 16:21


விழுப்புரம் காவல்துறையினர் மூலம் சாலையில் முழுவதும் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.இடம் :திருச்சி ரோடு நகராட்சி திடல் எதிரே .

01-10-2025 | 16:20


தேச வரைபடத்தில் பலரும் தேடிப்பார்த்த இடம். தமிழகத்தின் துயர வரலாற்று பக்கங்களில் இடம் பெற்ற தடம். குழந்தைகள் உள்ளிட்ட 41 பேரின் நாடித்துடிப்பு அடங்கி ஒடுங்கிப்போன இடம். இந்த இடத்தில் இரண்டு நாட்களுக்கு பிறகு போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. இடம்: வேலுச்சாமிபுரம், கரூர்.

01-10-2025 | 07:53


முதுமலை அருகே மசினகுடி வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகளில் மழையின் காரணமாக தண்ணீர் அதிகரித்துள்ளதால், வன உயிரினங்களுக்கான குடிநீர் தேவை பூர்த்தியாகி உள்ளது.

01-10-2025 | 07:53