இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
ஐப்பசி மாத திருவாதிரை திருநட்சத்திரத்தையொட்டி, செவிலிமேடு ராமானுஜர் வெள்ளி கவசம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
10-11-2025 | 06:54
சென்னையில் நடந்த மாநில வில்வித்தை போட்டியில், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்ற, மதுரவாயல் அர்ஜூனா வில்வித்தை பயிற்சி நிலைய வீரர்- வீராங்கனையருக்கு, காவல்துறை முன்னாள் அதிகாரி எம்.கருணாநிதி பரிசு வழங்கி பாராட்டினார்.
10-11-2025 | 06:51
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ராக்பெல்லர் வணிக வளாக மையத்தின் முகப்பில், 1931ம் ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, பிரமாண்ட கிறிஸ்துமஸ் மரம் வைத்து அலங்கரிக்கப்படும். இந்த ஆண்டுக்கான மரத்தை, நியூயார்க்கை சேர்ந்த ஜூடி ரஸ் தானமாக வழங்கினார்.
10-11-2025 | 06:46
தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சை பங்-வாங் புயல் தாக்க உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்கள். இடம்: கியூசன்.
10-11-2025 | 06:42
வடகிழக்கு மாநிலமான அசாமின் குவஹாத்தியில், 93வது விமானப்படை தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பிரம்மபுத்திரா நதிக்கரையில் உள்ள லச்சித் காட் பகுதியில் நடந்த விமானப் படையினரின் சாகச நிகழ்ச்சியில், சூர்யகிரண் விமான குழுவினரின் சாகசங்கள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தன.
10-11-2025 | 06:37