இன்றைய போட்டோ
தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு இண்டர்நேஷனல் லயன்ஸ் கிளப் சார்பில் கோவை ஐ.எம்.ஏ., ஹாலில் நடந்த சிறந்த மருத்துவர் மற்றும் மருத்துவ சேவைக்கான விருது வழங்கும் விழாவில் அரசு மருத்துவமனை டீன் நிர்மலா பேசினார். அருகில் இண்டர்நேஷனல் லயன்ஸ் கிளப் முன்னாள் மாவட்ட கவர்னர் பழனிசாமி, மாவட்ட கவர்னர் நித்யானந்தம் உள்ளிட்டோர்.
01-07-2024 | 22:30
மேலும் இன்றைய போட்டோ
ஹிமாச்சல பிரதேசத்தில் நடந்து வரும் சர்வதேச தசரா விழாவில் அம்மாநிலத்தின் நாட்டி என்ற பாரம்பரிய நடனமாடி அசத்திய நடன கலைஞர்கள். இடம்: குலு.
05-10-2025 | 07:02
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள உலக பிரசித்தி பெற்ற தால் ஏரியை தூய்மைப்படுத்தும் நோக்கில், நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ள களைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட படகோட்டிகள்.
05-10-2025 | 07:02
கடலூர் பண்ருட்டி அடுத்த திராசு கிராமத்தில் விவசாயிகள் பயிர் செய்யப்பட்ட மஞ்சள் சாமந்தி பூ பூத்து குலுங்கியது.
05-10-2025 | 06:15
விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி வைகுண்டவாச பெருமாள் சீனிவாச அலங்காரத்தில் சகஸ்ரதீப ஊஞ்சல் சேவையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
05-10-2025 | 05:31
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் பலத்த காற்றுடன் பெய்த மழையினால் அறுவடை தருணத்தில் நெற்பயிர்கள் சாய்ந்து கிடக்கின்றன.
04-10-2025 | 22:21