உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கடலூர் உழவர் சந்தை முன் நடை பாதை கடைகள் மற்றும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிச்சலுக்கு தீர்வு காண போக்குவரத்து போலீசார் பேரிகார்டுகள் வைத்தனர்.

19-07-2024 | 15:36


மேலும் இன்றைய போட்டோ

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சார்பில், பாரத் அட் 2026 என்ற இந்திய அரசின் தமிழ் காலண்டரை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் வெளியிட்டார்.

02-01-2026 | 18:38


சம வேலைக்கு சம ஊதியம் கோரி சென்னை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இடைநிலை ஆசிரியர்கள் எட்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

02-01-2026 | 18:38


கல்லிலே கலை வண்ணம் கண்டான்: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் புது மண்டபம் பொலிவு பெற்று தற்போது கலைநயம் மிக்க கற்கோயிலாக காட்சி தருகிறது .இம்மண்டபத்தை நிரந்தரமாக பார்வையாளர், கோவிலுக்கு வரும் பக்தர்கள் பார்வையிட மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

02-01-2026 | 18:37


டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 34வது பட்டமளிப்பு விழா சென்னையில் நடந்தது. இதில் துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். உடன் இடமிருந்து வலம் - ஏ.சி.எஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை செயலர் ரவிகுமார், துணைவேந்தர் கீதாலட்சுமி, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தர் ஏ.சி சண்முகம், தமிழக பா.ஜ தலைவர் நயினார் நாகேந்திரன், பல்கலையின் தலைவர் அருண்குமார் மற்றும் பதிவாளர் பழனிவேலு. இடம்: ஏ.சி.எஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகம், வேலப்பன்சாவடி.

02-01-2026 | 16:52


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொங்கல் பானைக்கு வர்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளி. இடம்: மேட்டுப்பாளையம் ரோடு, கோவை.

02-01-2026 | 11:01


ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசன விழாவில் சுவாமி தரிசனத்திற்காக வரிசையில் நின்ற பக்தர்கள்.

02-01-2026 | 10:55


ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சிறப்புமிக்க ஆம்பர் கோட்டையில் அலங்கரிக்கப்பட்ட யானைகள் மீது சுற்றுலாப் பயணியர் சவாரி செய்து புத்தாண்டைக் கொண்டாடினர். யானைகளின் நெற்றியில் வண்ணமயமான ஓவியங்கள் தீட்டப்பட்டு, ராஜஸ்தானி பாரம்பரியத் துணிகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது அவர்களை பெரிதும் கவர்ந்தது.

02-01-2026 | 08:05


புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி திருக்கோவிலில், மார்கழி மாதம் திருவாதிரையை முன்னிட்டு நடந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடிக்க அசைந்து வந்த தேர்.

02-01-2026 | 08:00


மயிலாடுதுறை மாவட்டம் கஞ்சா நகர கிராமத்தில் பழமையான அந்தோணியார் சர்ச் உள்ளது. இங்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்தும் மண்டியிட்டு தீச்சட்டி ஏந்தியும் வழிபாடு செய்தனர்.

02-01-2026 | 07:57