இன்றைய போட்டோ
மணிமேகலைப் பிரசுரம் மற்றும் மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் சார்பில் தினமலர் நிறுவனர் டி.வி. ராமசுப்பையரின் 40வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி சென்னை தி.நகரில் நடந்தது. இதில் தினமலர் நிறுவனர் டி.வி. ராமசுப்பையரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இடமிருந்து வலம் - ஆன்மீக அறிஞர் சஞ்சீவி ராஜா சுவாமிகள், மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு, மணிமேகலைப் பிரசுரம் நிர்வாக இயக்குனர் ரவி தமிழ்வாணன், எழுத்தாளர் சிவசங்கரி, திரைப்பட இயக்குனர் வசந்த் மற்றும் ஓய்வுபெற்ற காவல்துறை ஐ.ஜி பெரியய்யா.
20-07-2024 | 17:12
மேலும் இன்றைய போட்டோ
தூக்கமின்மை என்பது பலருக்கு பெரும் பிரச்னையாக உள்ளது. அதிலும், வயதானவர்கள் நல்ல தூக்கத்திற்காக என்ன விலை கொடுக்கவும் தயாராக உள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மையம் ஒன்றில் மெல்லிய இசைக்கருவிகளை எழுப்பி தூங்க வைக்கின்றனர்.
10-12-2025 | 22:41
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உடனடியாகஉதவி வழங்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது பிங்க் பெட்ரோல் போலீஸ் வாகனம். இதில் ஓட்டுபவர் முதல்சிறப்பு உதவி ஆய்வாளர் வரை அனைவரும் பெண்களாக இருப்பர். பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த வாகனங்களில் அதிகாரிகள் வலம் வருவர். பெண்களும் தயக்கமின்றி இவர்களிடம் புகார் தருவர். அந்த வாகனத்தை ஓட்டுபவரும், அதில் பயணிப்பவரும் ஆண்களாகவே இருந்தனர். இன்று( டிச.,10) இது பிங்க் பெட்ரோல் வாகனத்தின் அசல் நோக்கத்தையே சிதைப்பதாக உள்ளதே. இடம்: கோவை காந்திபுரம் காவல்நிலையம்
10-12-2025 | 22:41
கோவை காந்திபுரத்தில் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட செம்மொழிப்பூங்காவை நாளை (டிச.,11) பொது மக்கள் பார்வையிடலாம். பூங்காவில் இடம்பெற்றுள்ள பட்டாம்பூச்சி சிற்பம்.
10-12-2025 | 22:40
சென்னை அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரம் பகுதியில் தேங்கியிருந்த மணல் திட்டுகளை தூர்வாரி தண்ணீர் செல்ல வழி செய்யும் பணி நீர்வளத்துறை சார்பில் நடந்தது. தற்போது அந்த பகுதி முழுவதும் தூர்வாரப்பட்ட எவ்வளவு மழை வந்தாலும் கடலுக்குள் செல்லும் வகையில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இடம்: பட்டினப்பாக்கம்.
10-12-2025 | 22:39
தமிழக கடலோர பகுதிகளில் கடந்தாண்டு ஆயிரக்கணக்கில் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின . இதற்கு மீன்பிடி வலைகள், விசைப்படகுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு காரணங்களாக கூறப்படுகிறது. சமீப காலமாக மீண்டும் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி வருகின்றன. இந்த நிலையில் மெரினா கடற்கரையில் கரை ஒதுங்கிய ஆமை.
10-12-2025 | 22:39
அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் நடந்த சென்னை வானகரம் பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.
10-12-2025 | 20:15