இன்றைய போட்டோ
சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஹோட்டலில் டாக்டர் மோகன் டயாபட்டீஸ் அப்டேட் 11வது மாநாடு துவக்க விழா நடந்தது. இதில் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கிற்க்கு டாக்டர் மோகன் டயட்டிஸ் சார்பில் வாழ்நாள் பங்களிப்பு விருதை டாக்டர் மோகன் வழங்கினார். உடன் டாக்டர் மோகன்ஸ் நீரிழிவியல் நிறுவன குழுமத்தின் இயக்குநர் டாக்டர் அஞ்சனா மற்றும் டாக்டர் ரஞ்சித் உன்னிகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள்
27-07-2024 | 18:02
மேலும் இன்றைய போட்டோ
பீஹார் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பெகுசராய் மாவட்டத்தில் உள்ள குளத்தில் மீன் பிடித்த பின் ராகுல், மீனவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
03-11-2025 | 13:09
அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்தில் உள்ள வயல்களில் விளைந்து காணப்படும் நெல்மணிகள். இடம்: கல்லாபுரம், உடுமலை.
03-11-2025 | 10:25
நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அவ்வப்போது மலைகளை தழுவிச் செல்லும் மேகக்கூட்டம் சுற்றுலா பயணிகளை வசீகரிக்கிறது.
03-11-2025 | 10:16
மேம்பாலத்தில் சீரமைப்பு பணிகள் காரணமாக, போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் வெறிச்சோடிய சாலையில், பட்டம் விட்டு விளையாடிய சிறுவர்கள். இடம்: கொல்கட்டா.
03-11-2025 | 08:26
கிறிஸ்துவர்கள் தங்கள் முன்னோரை நினைவு கூரும் வகையிலான கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில், தங்கள் முன்னோர் மற்றும் உறவினர்களின் கல்லறையில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய கிறிஸ்துவர்கள்.
03-11-2025 | 08:21