இன்றைய போட்டோ
தினமலர் நாளிதழின் பட்டம் மாணவர் பதிப்பு சார்பில் , அவுட் ஆப் தி பாக்ஸ் திங்கிங் த்ரூ மேத்தமேடிக்ஸ் என்று அழைக்கப்படும் புதுமையான வழியில் கணிதத்தை கற்றுக் கொள்ளும் திட்டத்தை, சென்னை ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடி துவக்கி வைத்தார். உடன் தினமலர் இணை இயக்குனர் ஆர். லட்சுமிபதி, பள்ளி முதல்வர் ரேவதி பரமேஸ்வரன், பள்ளியின் தாளாளர் பிரபாகர் , பி.எஸ்.கல்வி குழும தலைவர் கே. வி. எஸ்.கோபாலகிருஷ்ணன், பேராசிரியர் சடகோபன் ராஜேஷ் உள்ளிட்டோர். இடம்: பி.எஸ். சீனியர் செகண்டரி பள்ளி , மயிலாப்பூர்.
02-08-2024 | 18:16
மேலும் இன்றைய போட்டோ
முதுகுளத்துார் சங்கரபாண்டி ஊருணி அருகே உள்ள வீட்டில் கொலு அலங்காரம் வைக்கப்பட்டுள்ளது.
11-10-2026 | 16:06
யுபிஐ மூலம் பணம் செலுத்தி டிக்கெட் எடுத்து, சென்னை போரூரிலிருந்து, பூந்தமல்லிக்கு மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய்யுடன் இணைந்து பயணம் செய்தார்.
11-10-2026 | 12:24
சென்னை விமான நிலையம் வந்திறங்கிய பிரதமர் மோடியை, கவர்னர் அர்லேக்கர், முதல்வர் விஜய், மத்திய அமைச்சர் முருகன் வரவேற்றனர்.
11-10-2026 | 11:38
அவிநாசியில் வீ தி லீடர்ஸ் அமைப்பு சார்பில் மகளிர் சக்தி மாரத்தான் போட்டி, பைபாஸ் ரோட்டில் நடந்தது.
11-10-2026 | 08:24
டில்லியில் தடையை மீறி கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டம் நடத்திய நிலையில் கன்னாட் ப்ளேஸ் பகுதியில் தேசிய கொடியை போர்த்தி தன் குழந்தையை பாதுகாப்பாக அழைத்து சென்ற தாய்.
11-10-2026 | 07:12
பெரம்பூர் எஸ்பிஆர் சிட்டியில் எஸ்பிஆர் சிட்டி நவராத்திரி உற்சவத்தின் ஒரு பகுதியாக சென்னையின் மிக உயரமான 47 மாடி குடியிருப்பு வளாகத்தை குறிக்கும் வகையில் 47.8 அடி உயர பிரமாண்ட கொலு அமைக்கப்பட்டு உள்ளது. உலக சாதனை முயற்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த கொலுவை இன்று முதல் அக் 20ம் தேதி வரை மக்கள் கண்டுகளிக்கலாம்.
11-10-2026 | 07:07
மேற்குவங்க மாநிலம் கொல்கட்டாவில் உள்ள பொதுத் துறையைச் சேர்ந்த, கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் நிறுவனத்தின் கப்பல் கட்டும் தளத்தில் நம் கடற்படைக்காக உள்நாட்டில் கட்டப்பட்ட மூன்றாவது தலைமுறை ரோந்து கப்பலான ஷ்ரேயஸ் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
11-10-2026 | 06:59