உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

திருப்பூரில், மத்திய அரசை கண்டித்து மதிமுகவினர் குமரன் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

09-08-2024 | 18:28


மேலும் இன்றைய போட்டோ

முன்னாள் மாணவர்கள் (1981 - 85 பேட்ச்) சந்திப்பின் அடையாளமாக, திருச்சி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரி நிர்வாகத்திற்கு மாணவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு கோடி ரூபாய் நிதி உதவி வழங்கினர். இடமிருந்து: கல்லுாரி டீன் ஜெயபால், முன்னாள் மாணவர்கள் சிவநமச்சிவாயம், பொன்னி, கல்லுாரி இயக்குனர் அகிலா, முன்னாள் மாணவர்கள் கார்த்திக், இல. ஆதிமூலம், பேராசிரியர்கள் பிரபுகுமார், ஜெரோம்.

07-02-2026 | 00:15


2023ம் ஆண்டிற்கான சிறந்த முன்னாள் மாணவர் விருது தினமலர் கோவை பதிப்பு வெளியீட்டாளர் இல.ஆதிமூலம் (இடது), 2024ம் ஆண்டிற்கான சிறந்த முன்னாள் மாணவர் விருது சிவநமச்சிவாயத்துக்கு வழங்கப்பட்ட து. விருதுகளை கல்லுாரி இயக்குனர் அகிலா வழங்கினார்.

07-02-2026 | 00:15


சமூக களப்பணிக்கான நிதி பங்களிப்பை கொடுக்காததை கண்டித்து சென்னை பல்கலை வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

06-02-2026 | 22:12


தமிழக அரசை கண்டித்து அங்கன்வாடி சத்துணவு பணியாளர்கள் கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

06-02-2026 | 22:11


சமூக களப்பணிக்கான நிதி பங்களிப்பை கொடுக்காததை கண்டித்து சென்னை பல்கலை வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

06-02-2026 | 22:11


கோவை ரேஸ் கோர்சிலுள்ள ஶ்ரீ சத்ய சாய் மந்திரில், பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளீஸ் 2 மாணவர்களுக்கான ஸ்ரீ லட்சுமி ஹயகிரீவர் ஹோமம் நடத்தப்பட்டது.

06-02-2026 | 22:11


திருநெல்வேலி மாவட்டம் கூந்தன் குளம், வடக்கு கழுவூர் பறவைகள் சரணாலயப் பகுதிகளுக்கு மணிமுத்தாறு தண்ணீர் வராததால் குளங்கள் காய்ந்து கிடக்கின்றன உணவின்றி வெளிநாட்டு பறவைகள் பரிதாபமாக இறக்கின்றன...

06-02-2026 | 22:10


திருமுருகன்பூண்டி, செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தீர்த்த குடம் ஊர்வலம் நடந்தது.

06-02-2026 | 22:10


தே.மு.தி.க விருப்பமனு விநியோகம் துவங்கிய நிலையில், விருப்பமனு வாங்குவதற்காக பேண்டு வாத்தியங்களுடன், குத்தாட்டம் போட்டபடி வந்த கட்சியினர். இடம் : கோயம்பேடு

06-02-2026 | 22:10