உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக்கல்லூரி பட்டுப்புழுவியல் துறை சார்பில் பட்டுக்கூடு கைவினை பொருட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி நிகழ்ச்சியில் வனக்கல்லூரி முதல்வர் பாலசுப்பிரமணி பேசினார். அருகில் துறை தலைவர் சித்தேஸ்வரி மற்றும் திட்ட ஆய்வாளர் பிரியதர்ஷினி உள்ளனர்.

20-08-2024 | 15:28


மேலும் இன்றைய போட்டோ

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பத்மஸ்ரீ விருது பெற்ற வேலு ஆசானின் பாரதி பறை பண்பாட்டு மையத்தை தமிழக கவர்னர் ரவி திறந்து வைத்தார். அவர் பறை இசைத்தார்.

12-12-2025 | 14:48


பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான தடகளப் போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியத்தில் நடந்தன. இதில் 400×100 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயப் போட்டியில் ஓடிய வீரர்கள்.

12-12-2025 | 14:47


காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள, சார்-பதிவாளர் அலுவலகத்திற்கு வருவோர் வாகனங்களை கண்டபடி நிறுத்துவதால், தாசில்தார் அலுவலகத்திற்கு வரும் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் மிகுந்த சிரமமடைந்து வந்தனர். இது குறித்த செய்தி நம் நாளிதழில் படத்துடன் வெளியானதை அடுத்து, வெளி வாகனங்கள் நுழைய வருவாய் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.

12-12-2025 | 06:21


கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நடைபெறும், 51வது ஆண்டு கேக் கண்காட்சியில் காந்தாரா திரைப்படத்தில் வரும் பஞ்சுருளி தெய்வம் போல தயாரிக்கப்பட்ட கேக்.

12-12-2025 | 06:12


பாரதியார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அவரது சிலையை ஜதி பல்லக்கில் வைத்து, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இருந்து அவர் வாழ்ந்த இல்லம் நோக்கி கவர்னர் ரவி, பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் தூக்கி வந்தனர்.

12-12-2025 | 06:07


கிறிஸ்மஸ் பண்டிகைக்கு அழகிய வித்யாசமான குறில்களை தயாரித்து வழங்குகின்றார் இடம் : ரேஸ்கோர்ஸ் காஸ்மோக் பாலித்தன் கிளப்

11-12-2025 | 22:29


அந்தி சாலையும் மாலை வேளையில் கதிரவன் அஸ்தமனம் ஆகும் நேரத்தில் பக்கிங்காம் கால்வாய் கடலில் கலக்கும் இடமான படகு குழாமில் படகு சவாரி செய்யும் நபர்.இடம் : முட்டுக்காடு

11-12-2025 | 21:25


செம்பரம்பாக்கம் ஏரியின் கரை சீரமைத்து பலப்படுத்தப்பட்ட பகுதியில் தேங்கியிருக்கும் தண்ணீர்

11-12-2025 | 21:24


ஊட்டி அருகே கோக்கால் கிராமத்தில், கோத்தர் பழங்குடியினர் இறந்தவர்களுக்கு வரசாவு சடங்கு செய்ய கிராமம் அருகேவுள்ள இடத்திற்கு சென்றனர்.

11-12-2025 | 21:24