இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
சட்டசபை தேர்தலை முன்னிட்டு கட்சியின் கொடி மற்றும் கட்சித் தலைவர்கள் உருவம் பொறித்த மாதிரி பண மாலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. தலைவர்களின் புகைப்படங்களுடன் கிரீடங்கள். இடம்: திருவொற்றியூர்.
20-03-2026 | 09:01
அடடே நம்ம தேர்தல் அதிகாரிகளின் கடமையை பாருங்களேன்! தேர்தல் தேதி அறிவித்த பின், பழக்க தோஷத்தில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளை மறைத்த அதிகாரிகள் மறைந்த தலைவர்களின் சிலைகளை மறைக்க வேண்டியதில்லை என தேர்தல் கமிஷன் சொன்னதால் திரையை விலக்கினர். ஆனாலும் அவர்கள் கையில் அரசியல் உள்ளது எனக் கூறி அதில் கிளவுஸ் போன்ற துணியால் மறைத்து கடமையாற்றி உள்ளனர். இடம்: கே.கே.நகர், மதுரை.
20-03-2026 | 08:57
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் பாலியில் உள்ள டென்பசார் என்ற இடத்தில் நைபி எனப்படும் அமைதி தினத்திற்கு பிரமாண்ட ஊர்வலம் நடந்தது. உருவ பொம்மைகளை மக்கள் சுமந்து சென்றனர்.
20-03-2026 | 08:43
மேற்காசிய போர் காரணமாக தொழிற்சாலை எரிவாயு மற்றும் சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள காரணத்தால், குஜராத்தின் சூரத்தில் உள்ள ஜவுளி தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக ரயில் நிலையத்தில் வரிசையில் காத்திருந்தனர்.
20-03-2026 | 08:28
மஹாராஷ்டிரா மாநிலத்தில் குடி பாட்வா என்ற பெயரில் மராத்தி புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நடந்த விழாவில் மும்பையில் பாரம்பரிய நவ்வாரி புடவை மற்றும் ஆபரணங்கள் அணிந்து இருசக்கர வாகனத்தில் கம்பீரமாக வலம் வந்த பெண்.
20-03-2026 | 08:24
திருப்பூர், சிக்கண்ணா கல்லூரி என்.எஸ்.எஸ் அலகு - 2 மாணவர்கள் சார்பில் சட்டமன்ற தேர்தல் ஓட்டு பதிவு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி பழைய பஸ் ஸ்டாண்ட்டில் நடந்தது. இதில் 100% வாக்களிப்பது குறித்த பஸ் பயணிக்களுக்கு அறிவுறுத்திய, கலெக்டர் மணீஸ் நாரணாவரே, மாநகராட்சி கமிஷனர் அமித்.
19-03-2026 | 23:05
திருவள்ளூரில் நேற்று இரவு திடீர் மழை பெய்ததால் மெய்யூர் அருகே உள்ள அரும்பாக்கம் கிராமத்தில் நெற்பயிர் மழைநீரில் மூழ்கியது
19-03-2026 | 23:04
விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசினார். அருகில் மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி.
19-03-2026 | 23:04
தாமரை பிரதர்ஸ் மீடியா பதிப்பகம் சார்பில், அஸ்பையர் சுவாமிநாதன் எழுதிய இன்சைடு தி வார் ரூம் எனும் ஆங்கில நூல் வெளியீட்டு விழா நடந்தது. நூலை, அமைச்சர் தியாகராஜன் வெளியிட எம்.பி., கார்த்திக் பெற்றுக்கொண்டார்.உடன், இடமிருந்து, அஸ்பையர் சுவாமிநாதன், தினமலர் நாளிதழின் இணை ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி. இடம்: தி.நகர், சென்னை.
19-03-2026 | 23:03