உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

திருவொற்றியூர் சூரை மீன்பிடி துறைமுகத்தில் படகுகள் பழுது பார்க்கும் தளம் கட்டும் பணி நடந்து வருகிறது. இடம்: திருவொற்றியூர் குப்பம்.

21-08-2024 | 18:57


மேலும் இன்றைய போட்டோ

பட்டாபிஷேக அலங்காரம், சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம்.

14-10-2026 | 19:14


சிஎம் சார் கோவைக்கு வரும்போது அப்படியே ஊர் புல்லா ஒரு ரவுண்ட் அடிச்சா, கோவைல இருக்குற எல்லா ரோடும் சரி ஆயிடும்.. இடம் : கோவை, ராமநாதபுரம் ரோடு

14-10-2026 | 18:53


சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு எரிந்து நாசம் ஆகின.

14-10-2026 | 18:53


பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு மதுரை மங்கையர்க்கரசி கல்லுாரியில் நடந்த பூமியை வாழவைப்போம் நுால் வெளியீட்டு விழாவில் கல்வி குழும தலைவர் அசோக்குமார் பேசினார். இடமிருந்து பேராசிரியை ரேணுகா தேவி, நுாலாசிரியர் திருமலை, ராஜேந்திரன், நுால் வெளியீட்டாளர் ராம சுப்பிரமணியன், பாலு.

14-10-2026 | 18:18


தமிழக அரசு சார்பில், டில்லி ரபி மார்க் கான்ஸ்டிடியூஷனல் கிளப்பில் நடத்தப்படும் தமிழக கைவினைப் பொருட்கள் கண்காட்சியை டில்லி தமிழ்நாடு இல்ல உள்ளுறை ஆணையர் ஆஷிஷ் குமார் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். உடன், தமிழ்நாடு இல்ல அதிகாரிகள்.

14-10-2026 | 18:16


மதுரை பெத்தானியாபுரம் அண்ணா மெயின் வீதியில் கற்கள் பெயர்ந்து பல மாதங்களாகியும் சீரமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகின்றனர்.

14-10-2026 | 18:06


சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலான மழை பெய்தது திடீரென பெய்த மழையால் மக்கள் நனைந்து கொண்டே பயணங்களை மேற்கொண்டனர் இடம் வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலை குன்றத்தூர்

14-10-2026 | 18:02


கோவை பூ மார்க்கெட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள சாமந்தி பூ.

14-10-2026 | 18:01


சோலார் பேனல் நடுவே மரம் வளர்க்கும் ஊராட்சி காங்கயம் அடுத்த, படியூர் ஊராட்சி சார்பில், சம்பந்தம்பாளையம்–படியூர் சாலையில் பொங்கலுார் மீனாட்சி வலசு அருகே ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு, சூரியசக்தி மின்தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. மின்தகடுகள் மேலே, மரம் வளர்ந்து வருவதால், அவை சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மின்தகடுகளை முறையாகப் பராமரிக்காமல் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுகிறது.

14-10-2026 | 17:54