இன்றைய போட்டோ
திருப்பூரில், தினமலர் மற்றும் ஸ்ரீ சக்தி கல்வி குழுமம் இணைந்து வழங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி, அவிநாசி அருகே ராக்கியாபாளையம், ஐஸ்வர்யா கார்டனில் உள்ள ஸ்ரீராஜராஜேஸ்வரி கோவிலில் நடந்தது. இதில் ஸ்ரீ சக்தி கல்விக்குழும சேர்மன் தங்கவேல், கிளாசிக் போலோ நிர்வாக இயக்குநர் சிவராம், ஆடிட்டர் ராமநாதன், ராஜராஜேஸ்வரி கோவில் டிரஸ்ட் தலைவர் ஞானகுரு ஆகியோர் கலந்து கொண்டனர்.
12-10-2024 | 09:41
மேலும் இன்றைய போட்டோ
நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சென்னை திநகரில் துர்கா பூஜைக்காக தயாராகும் துர்கா சிலைகள்.
06-10-2026 | 22:40
டில்லியில் தேர்தல் கமிஷன் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற இண்டி கூட்டணிதலைவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதை அடுத்து சாலையில் தர்ணாவில் ஈடுபட்டனர்.
06-10-2026 | 22:40
டில்லியில் தேர்தல் கமிஷன் அலுவலகம் நோக்கி இண்டி கூட்டணி தலைவர்கள் பேரணி சென்றனர். சாலையில் போலீசார் இரும்பு தடுப்புகளை அமைத்து தடுத்தனர். காங்கிரஸ் எம்பி ராகுல் தடுப்புகணை தாண்டி செல்வதற்காக படாதபாடுபட்டு தட்டுத்தடுமாறிஅந்த இரும்பு தடுப்புகள் மீது ஏறி நின்றார்.
06-10-2026 | 22:40
குற்றாலம் சீசன் முடிவுக்கு வந்ததை அடுத்து மெயின் அருவியில் ஏற்கனவே நடந்த ஆர்ச் கட்டுமான பணிகள் மீண்டும் தொடங்கின. இதனால் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
06-10-2026 | 22:39
குன்னூரில் இதமான காலநிலை நிலவிய நிலையில் கல்குழி பகுதியில் காணப்படும் பசுந்தேயிலை தோட்டம் மலை தொடரின் ரம்மிய காட்சி பயணிகளை கவர்ந்தது.
06-10-2026 | 22:39
உடுமலை பகுதியில் பெய்த மழையால், உடுமலை திருமூர்த்திமலையில் தோன்றிய சிற்றருவிகள் காண்போரை பிரமிக்க வைக்கிறது.
06-10-2026 | 22:38