உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

செடிகள் அதிகம் வளர்ந்து புதர்மண்டி காணப்படும் ராமன் தாங்கல் ஏரி.இடம் : சோழிங்கநல்லூர்.

12-10-2024 | 14:18


மேலும் இன்றைய போட்டோ

சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலையில் ஆபத்தான முறையில் சரக்கு வாகனத்தில் பயணிப்போரால் விபத்து அபாயம் உள்ளது.

07-10-2026 | 22:12


சென்னையை அடுத்துள்ள வண்டலூர் ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில்,பயிற்சி முடித்த அதிகாரிகளுக்கான பதக்கங்களை முதல்வர் விஜய் வழங்கினார்.அப்போது அணிவகுப்பு மரபுப்படி அதிகாரியின் வாளை உறையிலிட்டு கௌரவித்தார்.

07-10-2026 | 20:26


புது டில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகக் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் , பிரியங்கா , உள்ளீட்டோர் நேற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

07-10-2026 | 20:16


தி.நகர் கமலாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில், சேவா ஜோதி யாத்திரையை தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று துவக்கி வைத்தார். உடன் பா.ஜ. மூத்த தலைவர்கள் தமிழிசை சவுந்தர்ராஜன், கராத்தே தியாகராஜன் ஆகியோர்.

07-10-2026 | 20:16


கே.எம்.சி.எச்., ல் நடந்த தைராய்டு மருத்துவத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றிய கருத்தரங்கை மருத்துவமனை தலைவர் நல்லா பழனிசாமி துவக்கி வைத்தார். மருத்துவமனை இணை நிர்வாக இயக்குனர் அருண் பழனிச்சாமி உள்ளிட்டோர்.

07-10-2026 | 19:44


மதுரை தேவகி மருத்துவமனையில் இதய ரத்த குழாய்களின் தன்மைகளை துல்லியமாக கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் மகோடா கருவியின் அறிமுக விழாவை டாக்டர் தேவகி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இடமிருந்து டாக்டர்கள் நாகேந்திரன் , ரூபஸ் , ரீனஸ் , லட்சுமணதாஸ்.

07-10-2026 | 19:26


பிரதமர் மோடி ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து 25 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு மதுரை மேலஅனுப்பானடியில் நகர் பா.ஜ., சார்பில் சேவை தீப ஊர்வலம் நடந்தது.

07-10-2026 | 19:16


மதுரை செல்லுார் மார்க்கெட் ரோடு குண்டும் குழியுமாக மழைநீருடன் கழிவுநீர் கலந்து போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.

07-10-2026 | 18:17


புரட்டாசி பொங்கல் விழாவை முன்னிட்டு மீனாட்சியம்மன் அலங்காரத்தில் மேலத்திருமாணிக்கம் அரியமாணிக்கம் அம்மன்.

07-10-2026 | 18:06