உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சென்னை மயிலாப்பூர் பாரதி வித்தியா பவன் சார்பில் மார்கழி இசை விழாவை தமிழக கவர்னர் ஆர்.என். ரவி துவக்கி வைத்து கதாகலாஷேபம் ஓர் ஆய்வு என்ற நூலினை வெளியிட்டார் உடன் இடமிருந்து பவன்ஸ் சென்னை கேந்திரா துணை இயக்குனர் கே.வெங்கிடாச்சலம், இயக்குனர் கே.என்.ராமசாமி, கதாகாலட்சேபம் ஒரு ஆய்வு என்ற புத்தகத்தை நூலின் ஆசிரியர் பிரமிளா குருமூர்த்தி, விசாகா ஹரி, தலைவர் என்.ரவி, துணைத் தலைவர் நல்லி குப்புசாமி.

23-11-2024 | 08:28


மேலும் இன்றைய போட்டோ

வால்பாறையில் பருவமழைக்கு பின் கண்ணுக்கு எட்டிய தூரம் பசுமையாக காட்சியளிக்கும் தேயிலை தோட்டம். சுற்றுலா பயணியரை வசீகரிக்கின்றன. இடம்: மாணிக்கா எஸ்டேட்.

11-10-2026 | 22:30


காலையில் நிலவும் பனியில் தகதகவென உதிக்கும் சூரியன் பார்க்க கண்கொள்ளா காட்சியாக உள்ளது. இடம்: உடுமலை.

11-10-2026 | 22:29


மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். வரும் 17 ம் தேதி துர்கா பூஜை துவங்க உள்ள நிலையில் பந்தலில் துர்கா தேவியின் சிலையை நிறுவ எடுத்துச் சென்ற பக்தர்கள். இடம்: நாடியா.

11-10-2026 | 22:29


சென்னை கிண்டி ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி.

11-10-2026 | 20:08


ஜெயகோபால் கரோடியா இந்து வித்யாலயா பள்ளியின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடந்தது. பிரதமர் மோடி பள்ளியின் ஏ.ஐ.,லேப் காணொலி வாயிலாக துவக்கி வைத்தார்.

11-10-2026 | 20:06


விஷ்வ ஹிந்து வித்யா கேந்திரா நடத்தும், ஜெயகோபால் கரோடியா இந்து வித்யாலயா பள்ளியின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடந்தது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரதமர் மோடிக்கு நினைவு பரிசை வழங்கிய விஷ்வ ஹிந்து வித்யா கேந்திரா பொதுச் செயலாளர் கிரிஜா சேஷாத்திரி மற்றும் விஷ்வ ஹிந்து வித்யா கேந்திரா தலைவர் ஆர்.ஆர். கோபால்ஜி. உடன் இடமிருந்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் .

11-10-2026 | 20:04


ஜெயகோபால் கரோடியா இந்து வித்யாலயா பள்ளியின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடந்தது.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமர் மோடியை வரவேற்ற பள்ளி மாணவிகள்.

11-10-2026 | 20:02


விஷ்வ ஹிந்து வித்யா கேந்திரா நடத்தும், ஜெயகோபால் கரோடியா இந்து வித்யாலயா பள்ளியின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடந்தது.சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரதமர் மோடி உற்சாகமாக கையசைத்தார்.

11-10-2026 | 20:01


சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் ரூபாய் 13,000 கோடி செலவில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். முதல்வர் விஜய் பேசினார்.

11-10-2026 | 19:54