இன்றைய போட்டோ
தினமலர் நாளிதழ் மற்றும் கிருஷ்ணம்மாள் மகளிர் கலை அறிவியல் கல்லூரி இணைந்து மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா அச்சம் தவிர் வீறு கொள் ! வாகை சூடு ! என்ற தலைப்பில் கருத்தரங்கு கோவையில் நடந்தது. இதில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். இடமிருந்து தமிழ் துறை தலைவர் மணிமேகலை, ரூட்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இயக்குனர் கவிஞர் கவிதாசன், தினமலர் கோவை பதிப்பு செய்தி ஆசிரியர் விஜயகுமார், கல்லூரி செயலர் யசோதா தேவி, கல்லூரி முதல்வர் ஹராத்தி, டீன் வசந்தா உள்ளிட்டோர்.
11-12-2024 | 17:34
மேலும் இன்றைய போட்டோ
மேற்கு வங்க மாநிலம் பீர்பூமில், 'துர்கா பூஜை' திருவிழாவை முன்னிட்டு துர்கை அம்மன் சிலைகளுக்கான ஆபரணங்களைச் செய்யும் பணியில் மூத்த கைவினைஞர் ஒருவர் ஈடுபட்டுள்ளார்.
08-10-2026 | 18:16
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள விமானப் படை தளத்தில் நடைபெற்ற 'தரங் சக்தி 2026' பயிற்சியின் போது, இந்திய விமானப் படையின் சூர்யா கிரண் ஏரோபாட்டிக் குழுவின் போர் விமானங்கள் சாகசங்களைச் செய்து காட்டியது.
08-10-2026 | 18:16
விருதுநகர் அருகே பாலவனத்தம் வடக்குப்பட்டி உச்சினி மகா காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவை முன்னிட்டு முளைப்பாரி எடுத்து நேர்த்திகடன் செலுத்திய பக்தர்கள்.
08-10-2026 | 18:06
ராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிக்னல் கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது இடம் : உச்சிப்புளி.
08-10-2026 | 16:36
புரட்டாசி உற்ஸவத்தை முன்னிட்டு அலங்காரத்தில் மூலவர் கருப்பண்ண சுவாமி. இடம் : கீழக்கரை அருகே மேலவலசை காஞ்சிரங்குடி.
08-10-2026 | 16:36