இன்றைய போட்டோ
அரசு பள்ளிகளில் போதைப் பொருட்கள் பயன்பாட்டை தடுக்கும் வகையில், உணவு பாதுகாப்புத் துறை சார்பில், ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பயிற்சி கையேட்டை தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை கமிஷ்னர் லால்வேனா வழங்கினார். உடன் முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் உள்ளிட்டோர். இடம் :அரும்பாக்கம்,சென்னை
11-12-2024 | 17:35
மேலும் இன்றைய போட்டோ
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சுற்றுவட்டாரப் பகுதிகளில், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாது காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
14-10-2026 | 21:26
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னிட்டு, தேரோட்டத்தில், வீதி உலா வரும் விநாயகர் தேருக்கு வர்ணம் தீட்டும் பணியில் ஊழியர்கள்.
14-10-2026 | 21:26
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள யோகி ராம் சுரத்குமார் ஆசிரமத்தில், நவராத்திரி விழாவை முன்னிட்டு, விதவிதமாக வைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலு பொம்மைகள்.
14-10-2026 | 21:25
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள யோகி ராம் சுரத்குமார் ஆசிரமத்தில், நவராத்திரி விழாவை முன்னிட்டு, வைக்கப்பட்ட கொலு பொம்மைகளை பார்த்த பள்ளி குழந்தைகள்.
14-10-2026 | 21:24
சென்னை சோழிங்கநல்லுாரில் உள்ள சென்னை குடிநீர் வாரியத்தின் குடிநீரேற்றும் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட முதல்வர் விஜய்,மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுக்குழாய் அமைக்கும் திட்டத்தின் மாதிரி வடிவமைப்பை பார்வையிட்டார்.
14-10-2026 | 21:18
சென்னை, வடபழனி முருகன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள பிரமிட் வடிவிலான ‘சக்தி கொலு’வைக் காண நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது.அதில் இடம் பெற்றுள்ள சிம்மவாஹினி சிலையின் அழகில் மனம் பறிகொடுத்து நின்ற சிறுமி
14-10-2026 | 21:18
இன்று குடிநீரை வீணடித்தால், நாளை ரேஷன் கடைகளில்தான் குடிநீர் வாங்க நேரிடும் என்ற கருத்தை முன்வைத்து, கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளி மாணவியர் நடத்திய மழை நீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு நாடகம் பரவலாக பாராட்டைப் பெற்று வருகிறது.
14-10-2026 | 20:56