மேலும் இன்றைய போட்டோ
யூனியன் பாங்க் ஆப் இந்தியா கோவை மண்டலம் சார்பில் ராம்நகர் கோதண்டராமர் கோயிலில் அன்னதானம் வழங்கப்பட்டது.
13-02-2026 | 12:44
கேரளா மாநிலத்தில் மக்களின் பொழுதுபோக்குக்காக நீர் நிலைகளில் பயன்படுத்த வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட படகு. இடம்: பாலக்காடு ரோடு, பொள்ளாச்சி.
13-02-2026 | 07:51
ஊட்டி தொட்டபெட்டா அருகே உள்ள தேயிலை பூங்காவில், சிறுவர்களுக்கான பொழுது போக்கு அம்சங்கள் அதிகளவில் உள்ளதால் பள்ளி மாணவர்கள் விளையாடி மகிழ்ந்தனர்.
13-02-2026 | 07:48
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள பழமையான நாகேஸ்வர நாத் கோவிலில் ஒரு விசித்திரமான நம்பிக்கை நிலவுகிறது. பக்தர்கள் தங்கள் நீண்ட கால வேண்டுதல்களை பூட்டாகக் கருதி இங்குள்ள இரும்பு வேலிகளில் பூட்டிவிட்டுச் சென்றால் அவை விரைவில் நிறைவேறும் என நம்பப்படுகிறது. மகா சிவராத்திரி போன்ற விசேஷ காலங்களில் இந்த பூட்டு வேண்டுதல் அதிகரிக்கிறது.
13-02-2026 | 06:58
காதலர் தினம் (நாளை பிப்ரவரி 14) கொண்டாடப்படுவதை முன்னிட்டு, கோயம்பேடு பூ சந்தையில், கண்களை கவரும் விதமாக ரோஜா பூக்கள் மற்றும் வண்ணமயமான மலர்கள் விற்பனைக்கு குவிந்துள்ளன.
13-02-2026 | 06:49
காஞ்சிபுரம் திருக்காலிமேடு அருந்ததியர் நகர் 2வது தெருவில் கழிவுநீர் கால்வாய் மண் திட்டுகளால் தூர்ந்து இருந்தது. இது குறித்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானதையடுத்து மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மண் திட்டுகளால் தூர்ந்த கால்வாயை தூர்வாரி சீரமைத்தனர்.
13-02-2026 | 06:44