இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் கழிப்பறை கதவு கழன்று 2 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் அப்படியே வைத்துள்ளனர். சரிசெய்ய ஆள் கிடைக்க வில்லையா, இல்லை ஆணி கிடைக்க வில்லையா.
07-10-2026 | 17:56
நவராத்திரி, தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு, குருகிராமில் பாரம்பரிய முறையில் அகல்விளக்குகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
07-10-2026 | 15:36
தலைநகர் டில்லியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கு எதிரான போராட்டங்கள், அரசு தலைமைப் பதவியில் பிரதமர் நரேந்திர மோடி 25 ஆண்டுகள் நிறைவு செய்தது தொடர்பான கொண்டாட்டங்களால், பல இடங்களில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டன. இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலை 24ல், அக் ஷர்தம் அருகே, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
07-10-2026 | 15:36
விழுப்புரம் திருச்சி தேசிய நெடுஞ்சாலை பிரதமரின் சாதனை விளக்க நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு தெரிவித்ததால் பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
07-10-2026 | 14:56
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே பிரதமரின் 25 ஆம் ஆண்டு சாதனை விளக்கி பா.ஜ.க., இளைஞர் அணி தீபஜோதி ஊர்வலமாக சென்றனர்.
07-10-2026 | 14:55