உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

பொங்கல் பண்டிகை நெருங்குவதை ஒட்டி, தி.நகர் ரங்கநாதன் தெருவில் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம்

04-01-2025 | 21:30


மேலும் இன்றைய போட்டோ

பணிநிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தூய்மை பணியாளர்கள் மெரினா கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். இடம்: சென்னை.

05-11-2025 | 13:28


சென்னையில் அதிமுக தலைமை அலுவலகம் முன் வைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பேனர்.

05-11-2025 | 10:18


காஞ்சிபுரம், வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கோ பூஜை மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து உற்சவர் முருகன் ரத்தினாங்கி சேவை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

05-11-2025 | 08:15


மழைக்காலத்தில் மீட்பு பணிக்காக புதிதாக கொள்முதல் செய்யப்பட்டுள்ள படகுகள், ராஜரத்தினம் மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளன. இடம்: எழும்பூர்.

05-11-2025 | 08:10


கூடலூர் கொளப்பள்ளி சின்ன ஆனைப்பள்ளம் டான் டீ தொழிலாளர்கள் குடியிருப்பு எதிரே, சுகமாக உறங்கிய கட்டை கொம்பன் யானை, வெயில் சூடேறியதால் மெதுவாக எழுந்து, சோம்பல் முறித்து அங்கிருந்து நகர்ந்தது.

05-11-2025 | 08:05


கால்மேகி புயல் காரணமாக வெள்ளநீர் சாலைகளில் பாய்ந்து வாகனங்களை ஒன்றின் மேல் ஒன்று அடுக்கி வைத்துள்ளது. இடம்: செபூ நகரம், பிலிப்பைன்ஸ்.

05-11-2025 | 07:04


கோவை பெரியநாயக்கன் பாளையம் அருகே உள்ள எல்லை கருப்பராயன் கோவில் திருவிளக்கு பூஜையில் துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு விளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்த பூஜையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

05-11-2025 | 07:00


ஜம்மு- காஷ்மீரின் ஸ்ரீநகரில் இலையுதிர் காலம் துவங்கி உள்ளது. மரங்களில் இருந்து உதிர்ந்த செம்மஞ்சள் நிற இலைகள் இடையே நடந்து சென்றவர்களுக்கு அழகிய சூழலை ஏற்படுத்தியது.

05-11-2025 | 06:48


சீக்கிய சமயத்தின் நிறுவனர் குரு நானக் தேவ் ஜெயந்தியை முன்னிட்டு, பஞ்சாபின் அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் 'நகர் கீர்த்தன்' நிகழ்ச்சி நடந்தது. இதில் சீக்கியர்களின் பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்ற சிறுவர்கள், பக்தி பாடல்களை பாடினர்.

05-11-2025 | 06:40