உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

பொங்கல் பண்டிகை ஒட்டி வீடு கடைகளுக்கு காப்பு கட்டுவதற்காக பூளைப் பூ, ஆவாரம்பூ வாங்கும் பெண்கள். இடம் கோவை பூ மார்க்கெட்

12-01-2025 | 13:50


மேலும் இன்றைய போட்டோ

பிரசார மேடையில் தலைவர்கள் கர்ஜிப்பதற்கு முன்பே, தொண்டர்கள் தங்கள் முகத்தில் தலைவர்களை சுமக்க துவங்கிவிட்டனர். மாஸ்க்கை கழற்றினால் நான்...மாட்டிக்கொண்டால் என் தலைவர்! என்ற ரேஞ்சுக்கு கலக்கி வருகின்றன இந்த லீடர் மாஸ்க்குகள். இடம்: பிராட்வே, சென்னை.

25-03-2026 | 06:50


திருவொற்றியூர் மாட்டு மந்தை மேம்பாலம் அருகே உள்ள குட்டையில் கூட்டம், கூட்டமாக இரை தேடும் கொக்கு, மஞ்சள் மூக்கு நாரை உள்ளிட்ட பறவைகள்.

25-03-2026 | 06:41


மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழாவில் இரண்டாம் நாளில், வெள்ளி சூரிய பிரபையில் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்த கபாலீஸ்வரர்- கற்பகாம்பாள்.

25-03-2026 | 06:38


மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்கும் வைகை அணை கோடை வெயில் சுட்டெரிக்க துவங்கியுள்ளதால் நீர்வரத்து இன்றி வறண்டுள்ளது. இடம்: ஆண்டிப்பட்டி, தேனி.

25-03-2026 | 06:33


ஊட்டி பஸ்நிலையம் எதிரே உள்ள நடைபாதை , கழிப்பிடமாக மாறி பராமரிப்பின்றி உள்ளதால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.

24-03-2026 | 22:22


மிளகாய் செடிகளில் பறிக்கப்பட்ட காய்களை தரம் பிரிக்கும் தொழிலாளர்கள்.இடம்.உடுமலை

24-03-2026 | 22:21


கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று நடந்த யாகசாலை பூஜையில் கலந்து கொண்ட உபயதாரர்கள் மற்றும் பொதுமக்கள்.

24-03-2026 | 22:21


சட்டசபை தேர்தலில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி தேனி உழவர் சந்தையில் காய்கறி, பழங்களால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டிருந்தது.

24-03-2026 | 22:20


தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ள நிலையில் அரசு மருத்துவமனைகளில் மறைக்கப்படாமல் உள்ள முதல்வர் புகைப்படங்கள். இடம்.ராஜீவ் காந்தி பொது அரசு மருத்துவமனை

24-03-2026 | 22:19