உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு மாட்டுக்கான அலங்காரப் பொருட்கள் விற்பனை படுஜோராக நடந்தது. இடம்:விழுப்புரம் காணைகிராமம்.

14-01-2025 | 17:58


மேலும் இன்றைய போட்டோ

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் முத்தாலம்மன் கோவிலில் 99 ஆம் ஆண்டு செடல் உற்சவத்தை யொட்டி தேர் திருவிழா நடந்தது.

13-02-2026 | 21:00


மதுரை வைகை ஆற்றில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இடம்: மேல கைலாசபுரம் ,தத்தனேரி.

13-02-2026 | 20:59


திண்டுக்கல்லில் தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் முக்காடு அணிந்து போராட்டம் நடந்தது.

13-02-2026 | 20:58


அரசுத்துறை காலிபணியிடங்களுக்கு போட்டி தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் பணி நியமன ஆணைகள் வழங்கினார்.

13-02-2026 | 20:58


கடலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு போதுமான அளவுக்கு மழை பெய்துள்ளது அதன் எதிரொலியால் முந்திரி விளைச்சலில் பூ பூத்து குலுங்குகிறது. இடம் குள்ளஞ்சாவடி சாமுட்டி குப்பம்.

13-02-2026 | 20:58


கோவிலிஞ்சேரி கிராமத்தில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்கப்பட்டுள்ள கட்சி

13-02-2026 | 20:57


திருநெல்வேலி மாவட்டம் பள்ளமடை அருகே பச்சை பசேலென வளர்ந்து வரும் நெல் பயிர்களை பூச்சிகள் தாக்கி விடாமல் இருக்க மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி.

13-02-2026 | 20:56


குரோம்பேட்டை பஸ்நிலையத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதை தடை செய்ய அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலிகள் உடைந்தும் குப்பைகளை கொட்டப்பட்டும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி

13-02-2026 | 20:56


புதிய யு.ஜி.சி. விதிகளை அமல்படுத்த வலியுறுத்தி மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு தமிழ்நாடு (எஃப்.எஸ்.ஓ.டி.என்) அமைப்பு சார்பில் சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் பேரணி சென்றனர்.

13-02-2026 | 20:55