உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

காணும் பொங்கலை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வந்த குழந்தைகளுக்கு தொலைந்து போனால் அவர்களை கண்டுபிடிக்கும் வகையில் குழந்தையின் பெற்றோரின் செல்போன் நம்பர் எழுதிய டேக் கட்டப்பட்டது.

16-01-2025 | 18:08


மேலும் இன்றைய போட்டோ

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் சார்பில் பத்தாம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

11-02-2026 | 16:38


கோவை உக்கடம் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

11-02-2026 | 16:37


சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் ஊராட்சி செயலர் சங்கம் சார்பில் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வலியுறுத்தி திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

11-02-2026 | 16:37


விழுப்புரம் அரசு கலை கல்லூரி விரிவுரையாளர்கள் போராட்டத்தில் மாணவர்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

11-02-2026 | 16:37


சென்னை காயிதே மில்லத் அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு, தங்களது கோரிக்கை மனுக்களை மாணவிகளுக்கு வழங்கினர்.

11-02-2026 | 16:37


புதுச்சேரி வெங்கடசுப்ப ரெட்டியார் சிலை அருகே முதல்வர் ரங்கசாமி வாகனத்தை முற்றுகையிட முயன்ற பொதுப்பணித்துறை ஊழியர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

11-02-2026 | 16:36


தே.மு.தி.க அலுவலகத்திற்கு விருப்ப மனு வாங்க வந்த அக்கட்சியினர் சாலையிலேயே வாகனங்களை விட்டுச் சென்றதால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இடம்: கோயம்பேடு .

11-02-2026 | 16:36


சிவகங்கையில் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

11-02-2026 | 16:36


சிறிதளவும் உயிர் பயம் இல்லாமல் தன் குழந்தையுடன் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் தாய். இடம்: திருமங்கலம்.

11-02-2026 | 16:35