உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

ஆற்று திருவிழாவை முன்னிட்டு விழுப்புரம் அடுத்த மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் தீர்த்தவாரிக்கு வந்த திருவண்ணாமலை அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலையார்.

18-01-2025 | 14:59


மேலும் இன்றைய போட்டோ

ராம நவமி உத்சவத்தின் மூன்றாம் நாளில் கோதண்டராமர் அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி மாடவீதியில் உலா வந்தார். இடம்: காலடிப்பேட்டை, திருவொற்றியூர்.

23-03-2026 | 07:36


மேற்காசிய நாடுகளில் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு கடும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதன் எதிரொலியாக பல இடங்களில் ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ள நிலையில் சில இடங்களில் விறகு பயன்படுத்தி சமைக்கப்படுகின்றன. இடம்: திருவல்லிக்கேணி.

23-03-2026 | 07:25


கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் 1,150 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிகழ்வு நடந்தது. இதில் 45 அடி உயரம் உள்ள இரண்டு தூக்க மரங்களின் மேல் முனையில் கட்டப்பட்ட நான்கு தூக்க வில்களில் குழந்தைகளை ஏந்திச்சென்ற தூக்கக்காரர்கள்.

23-03-2026 | 07:18


மேற்காசிய நாடுகளில் நடக்கும் போர் காரணமாக வடமாநிலங்களில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சமையலுக்கு பயன்படுத்தும் வகையில் மாட்டு சாணத்தால் ஆன வறட்டி விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இடம்: பிரயாக்ராஜ், உத்தர பிரதேசம்.

23-03-2026 | 07:14


கேரளாவில் ஏப்ரல் 9ல் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதை முன்னிட்டு பிரசாரம் களைகட்டி உள்ளது. பரவூர் தொகுதியில் போட்டியிடும் கேரள சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும் காங்., வேட்பாளருமான வி.டி.சதீஷன் கொச்சியில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.

23-03-2026 | 07:09


பிரதமர் மோடியை மலையாள நடிகர் கிருஷ்ண குமார் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது அவரது பேரக்குழந்தையை தூக்கி கொஞ்சிய மோடி. இடம்: பிரதமர் இல்லம், புதுடில்லி.

23-03-2026 | 07:04


வனப்பகுதிகளில் அரிதிலும் அரிதாக காணப்படும் இந்திய சருகுமான்கள், அழிவின் விளிம்பில் உள்ளது; அவை குறித்த விபரங்களை தேடும் பணியை, வனத்துறையினர் துவங்கியுள்ளனர்.

23-03-2026 | 06:49


நீரின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் உலக தண்ணீர் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. அன்றாட தேவைக்காக நீண்ட தொலைவில் இருந்து குடத்தில் குடிநீரை சுமந்து சென்ற பெண்கள். இடம்: அகர்தலா, திரிபுரா.

23-03-2026 | 06:41


இது சரத்குமார் கை அல்ல…! உங்களது கருத்தை கமென்ட் செய்யுங்கள்.

23-03-2026 | 06:33