உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கோவை அல் அமீன் காலனியில் உள்ள ஜமாத்தில் ரம்ஜான் நோன்பு இருக்கும் இஸ்லாமியர்கள் இலவச நோன்பு கஞ்சி வாங்கி சென்றனர்.

02-03-2025 | 21:09


மேலும் இன்றைய போட்டோ

குஜராத் மாநிலம் ஆமதாபாதில் கடும் கோடை வெப்பம் நிலவும் சூழலில் வறண்டு கிடக்கும் சபர்மதி ஆற்றின் வழியாக நடந்து சென்ற வாலிபர்கள்.

11-05-2026 | 08:49


பஞ்சாபில் நெல் மற்றும் கோதுமைக்கு மாற்றாக குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தும் சூரியகாந்தி சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அங்குள்ள பட்டியாலாவில் நன்கு விளைந்த சூரிய காந்தி பூக்கள் மஞ்சள் போர்வை போர்த்தியது போல காட்சியளிக்கின்றன.

11-05-2026 | 08:45


சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த அமைச்சரவை பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வராக விஜய்க்கு கவர்னர் அர்லேக்கர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

10-05-2026 | 13:13


உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கோடை வெயில் கொளுத்துகிறது; அதன் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தாயும்-சேயும் துணியால் போர்த்தியபடி சென்றனர்.

10-05-2026 | 07:32


நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் கூண்டில் அடைக்கப்பட்ட புலி மீது தண்ணீரை ஊற்றி குளிர்வித்த வனத்துறை ஊழியர்.

10-05-2026 | 07:24


உத்தரபிரதேச மாநிலம் காசியில் பழமையான மற்றும் நெரிசலான தால் மண்டி பகுதியில் உள்ள சட்டவிரோத கட்டடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார்.

10-05-2026 | 07:13


கர்நாடக மாநிலம் ஷிவமொகா மாவட்டம் சோரப் தாலுகாவில் உள்ள சித்தூரில் ஏரி வேட்டை எனப்படும் பாரம்பரிய கருவிகளை பயன்படுத்தி மீன் பிடிக்கும் நிகழ்வான கெரே பேட்டே திருவிழாவில் ஆர்வத்துடன் மீன் பிடித்த மக்கள்.

08-05-2026 | 07:14


நாகலாந்து மாநில கவர்னர் நந்த் கிஷோர் யாதவ், காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். அருகில் இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

08-05-2026 | 07:05


ஊட்டி தாவரவியல் பூங்காவில் , பூத்து குலுங்கும் மெரிகோல்டு மலர்களை கண்டு ரசித்து செல்லும் சுற்றுலா பயணிகள்.

07-05-2026 | 14:58