உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

திருப்பூர், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் பள்ளியில் யூ.கே.ஜி., குழந்தைகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

19-03-2025 | 16:05


மேலும் இன்றைய போட்டோ

இந்தியா –- ஆஸ்திரேலியா 'ஏ' அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி இன்று துவங்கும் நிலையில், இந்தியா அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் லட்சுமிபதி பாலாஜி, பேட்ஸ்மேன் சாய் சுதர்சன் ஆகியோர் நேற்று பேட்டி அளித்தனர்.

06-10-2026 | 04:24


அக்டோபர் மாத புற்றுநோய் விழிப்புணர்வுக்காக மதுரை அரசு மருத்துவமனை ஜெய்கா கட்டட வளாகம் பிங்க் நிறத்தில் ஒளிர்கிறது.

06-10-2026 | 01:06


திருப்பூரில் கனமழையால் வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்து சென்றது. இடம்: அம்மாபாளையம்.

05-10-2026 | 22:21


புது டெல்லியில் நடைபெற்ற இருதரப்பு மாநாட்டின் போது, பிரதமர் மோடியும் சுவிட்சர்லாந்து கூட்டமைப்பின் தலைவர் கய் பார்மலிஷம் சந்தித்துக் கொண்டனர்.

05-10-2026 | 20:44


சேலம் மாவட்டம், ஓமலுார் அருகே எம்.செட்டிப்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில், போதிய வகுப்பறைகள் இல்லாததால், மாணவ – மாணவியர் மரத்தடியில் அமர்ந்து கல்வி கற்கும் நிலை உள்ளது. பள்ளிக்கல்வி துறைக்கு பல ஆயிரம் கோடிகளை தமிழக அரசு கொட்டி கொடுத்தாலும், இந்த மரத்தடி வகுப்பறை கலாசாரத்திற்கு எப்போது தான் முற்றுப்புள்ளி என்பதே பெற்றோரின் கேள்வி!

05-10-2026 | 20:07


மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலின் வடக்குப் பகுதி மேலவடம் போக்கி தெருவில் அகற்றப்படாத குப்பையால் துர்நாற்றம் வீசுகிறது.

05-10-2026 | 19:45


உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் சாலையை அகலப்படுத்த, டால் மண்டியில் கட்டடங்களை இடிக்கும் பணி நேற்று தொடங்கியது.

05-10-2026 | 19:44


இந்தோனேசியாவின் போர்னியோ மற்றும் சுமத்ரா காடுகளில் மட்டுமே காணப்படக்கூடிய ஐந்து ஒராங்குட்டான் குட்டிகள், சர்வதேச வனவிலங்கு கடத்தல் கும்பலால் கடத்தி வரப்பட்டு, அதிகாரிகளுக்குப் பயந்து ஒடிசா மாநிலம் பாலசோர் வனப்பகுதியில் கைவிடப்பட்டன.கடந்த மாதம் வனத்துறையினரால் மீட்கப்பட்ட இந்த இளம் குட்டிகள், தாயின் அன்போடும் அரவணைப்போடும் மிகச் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வந்ததால் தற்போது மிகவும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் உள்ளன. அதில் இரண்டு குட்டிகள் நேற்று கம்பளத்திலும் ஹாயாகப் படுத்திருந்தன.

05-10-2026 | 19:44


ஊட்டியில் பெய்த கனமழைக்கு, படகு இல்ல சாலையில் தேங்கிய நீரால் , வாகனங்கள் இயக்க முடியவில்லை.

05-10-2026 | 19:22