உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

விருத்தாசலம் ஜங்ஷன் ரோடு எதிரில் இருசக்கர வாகனத்தில் சென்வரும், பள்ளி மாணவர்களை அழைத்து சென்ற வேன் டிரைவரும் சாலையில் சண்டையிட்டதால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

27-03-2025 | 16:47


மேலும் இன்றைய போட்டோ

ஹிமாச்சல பிரதேசத்தில் நடந்து வரும் சர்வதேச தசரா விழாவில் அம்மாநிலத்தின் நாட்டி என்ற பாரம்பரிய நடனமாடி அசத்திய நடன கலைஞர்கள். இடம்: குலு.

05-10-2025 | 07:02


ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள உலக பிரசித்தி பெற்ற தால் ஏரியை தூய்மைப்படுத்தும் நோக்கில், நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ள களைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட படகோட்டிகள்.

05-10-2025 | 07:02


கடலூர் பண்ருட்டி அடுத்த திராசு கிராமத்தில் விவசாயிகள் பயிர் செய்யப்பட்ட மஞ்சள் சாமந்தி பூ பூத்து குலுங்கியது.

05-10-2025 | 06:15


விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி வைகுண்டவாச பெருமாள் சீனிவாச அலங்காரத்தில் சகஸ்ரதீப ஊஞ்சல் சேவையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

05-10-2025 | 05:31


திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் பலத்த காற்றுடன் பெய்த மழையினால் அறுவடை தருணத்தில் நெற்பயிர்கள் சாய்ந்து கிடக்கின்றன.

04-10-2025 | 22:21


சென்னை நகரில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால் பெரியவர்கள் கையில் குடைப்பிடித்தும்,குழந்தைகளுக்கு தலையில் தொப்பி அணிவித்தும் அழைத்து சென்றனர். இடம் கிண்டி

04-10-2025 | 20:35


தீபாவளி பண்டிகை ஒட்டி கோவை பெரிய கடை வீதியில் புத்தாடை வாங்க குவிந்த மக்கள்.

04-10-2025 | 20:23


தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் தாமிரபரணி ஆற்றங்கரையை பலப்படுத்தும் வகையில் குவிக்கப்பட்டுள்ள மண்.

04-10-2025 | 19:57


புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த கோவை வெள்ளலூர் ஸ்ரீ பூமீநீளா நாயகி சமேத ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள்.

04-10-2025 | 13:25