உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சென்னை கவர்னர் மாளிகை பாரதியார் மண்டபத்தில் தமிழ் அறிஞர்களுடன் கலந்துரையாடி பாராட்டி கவர்னர் ரவி, பேராசிரியர் ஞானசம்பந்தம் உள்ளிட்ட 18 பேருக்கு கேடயங்களை வழங்கினார்.

15-06-2025 | 09:10


மேலும் இன்றைய போட்டோ

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கோடை வெயில் கொளுத்துகிறது; அதன் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தாயும்-சேயும் துணியால் போர்த்தியபடி சென்றனர்.

10-05-2026 | 07:32


நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் கூண்டில் அடைக்கப்பட்ட புலி மீது தண்ணீரை ஊற்றி குளிர்வித்த வனத்துறை ஊழியர்.

10-05-2026 | 07:24


உத்தரபிரதேச மாநிலம் காசியில் பழமையான மற்றும் நெரிசலான தால் மண்டி பகுதியில் உள்ள சட்டவிரோத கட்டடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார்.

10-05-2026 | 07:13


கர்நாடக மாநிலம் ஷிவமொகா மாவட்டம் சோரப் தாலுகாவில் உள்ள சித்தூரில் ஏரி வேட்டை எனப்படும் பாரம்பரிய கருவிகளை பயன்படுத்தி மீன் பிடிக்கும் நிகழ்வான கெரே பேட்டே திருவிழாவில் ஆர்வத்துடன் மீன் பிடித்த மக்கள்.

08-05-2026 | 07:14


நாகலாந்து மாநில கவர்னர் நந்த் கிஷோர் யாதவ், காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். அருகில் இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

08-05-2026 | 07:05


ஊட்டி தாவரவியல் பூங்காவில் , பூத்து குலுங்கும் மெரிகோல்டு மலர்களை கண்டு ரசித்து செல்லும் சுற்றுலா பயணிகள்.

07-05-2026 | 14:58


விழுப்புரம் ரயில் நிலையம் முன்பு இடதுசாரிகள் மற்றும் வி.சி., கட்சி இணைந்து சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

07-05-2026 | 14:57


கோவை வனக்கல்லூரி வளாக சுற்றுச்சுவர் வெளிப்புறத்தில் வரையப்படும் நம் மாநிலத்தைச் சேர்ந்த பறவைகள்.

07-05-2026 | 14:57


தென்மேற்கு பருவமழை சற்று முன்னரே பெய்யும் என்று சொன்னார்கள்… மகிழ்வோடு இன்று வரும், நாளை வரும் என்று காத்திருந்து, காய்ந்து போன குளத்துக்கு கடைசி சாட்சி இந்த மீன்! இடம்: கோவை, நாகராஜபுரம் நரசாம்பதி குளம்

07-05-2026 | 07:40