உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

தும்பவனம் கால்வாய் ஓரம் அமைக்கப்பட்டு இருந்த இரும்பு தடுப்பு சேதமடைந்தள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.

27-06-2025 | 02:38


மேலும் இன்றைய போட்டோ

காஞ்சிபுரம் தாயார் குளத்தில், கச்சபேஸ்வரர் கோவில், இரண்டாம் நாள் தெப்போத்சவம் நடந்தது. இதில் சுந்தராம்பிகையுடன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி கச்சபேஸ்வரர், தெப்பத்தில் ஐந்து சுற்று உலா வந்தார்.

22-03-2026 | 09:13


கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில், ராம நவமி உத்சவத்தின் இரண்டாம் நாளில், ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் எழுந்தருளி, மாடவீதிகளில் வலம் வந்தார். இடம்: காலடிப்பேட்டை, திருவொற்றியூர்.

22-03-2026 | 09:09


கோடை காலத்தில் வறண்டு காணப்படும் ஹிமாச்சல பிரதேசத்தின் மலைப்பகுதிகள் தற்போது பனிப்பொழிவால் வெண்மையாக காட்சியளிக்கின்றன. அங்குள்ள குலுவில் நிலவும் ரம்மியான சூழலை உற்சாகம் ததும்ப அனுபவித்த சுற்றுலா பயணியர்.

22-03-2026 | 09:05


திமுக பிரசார கூட்டத்துக்காக சரக்கு வாகனத்தில் அழைத்து வரப்பட்ட பெண்களுக்கு பணம் வினியோகித்த அக்கட்சி நிர்வாகி. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் பறக்கும் படை அதிகாரிகள் யாரும் அதை தடுக்கவில்லை. இடம்: காளையார் கோவில், சிவகங்கை.

22-03-2026 | 08:29


உத்தரபிரதேச மாநிலம், பிரக்யாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமம் பகுதியில் நீர்வரத்து இல்லாததால் கங்கை நதி வறண்டு காணப்படுகிறது. நீர்மட்டம் குறைந்து மணல் திட்டுகள் வெளியே தெரிவதால் ஆற்றில் மக்கள் நடந்தே செல்கின்றனர். மார்ச் மாதத்திலேயே திரிவேணி சங்கமத்தின் பெரும்பகுதி வறண்டு காணப்படுவது, அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

22-03-2026 | 06:21


ஊரே விசில்மயம் தான்...கோவையில் பஸ்களில் உபயோகப்படுத்தப்படும் விசில்கள்.

21-03-2026 | 19:25


ஊரே விசில் மையம் தான்...கோவையில் பஸ்களில் உபயோகப்படுத்தப்படும் விசில்கள். இடம்: மருதமலை ரோடு.

21-03-2026 | 19:24


ஊட்டியில், உள்ள ஓட்டலில் , சமையலுக்கு விறகு பயன்படுத்தப்படுகிறது.

21-03-2026 | 19:24


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்- சென்னை சாலையில் உள்ள ஜக்காம்பேட்டை பகுதியில் கட்டப்படும் மேம்பாலம்

21-03-2026 | 19:24