உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

செய்யூர் அடுத்த வெடால் கிராமத்தில் 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட தாங்கல் ஏரி மற்றும் 350 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரியில் பழுதான மதகுகளால், தண்ணீர் வீணாக வெளியேறுகிறது.

06-07-2025 | 02:27


மேலும் இன்றைய போட்டோ

தேனி கலெக்டர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு உணவு தயாரிக்கும் பணி நடந்தது.

07-10-2025 | 16:49


திருநெல்வேலி ஜங்ஷன் தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலக்கும் இடத்தை பாமக தலைவர் அன்புமணி நேரில் பார்வையிட்டார்.

07-10-2025 | 16:44


வனப்பகுதியில் புதுசா ரிசார்ட் கட்டியிருக்கானு நினைச்சுக்காதீங்க, பல ஆண்டு போராட்டத்துக்கு பின், மண் குடிசையில் வாழ்ந்த பழங்குடியின மக்களுக்கு புதிதாக கான்கிரீட் வீடு கட்டி கொடுத்திருக்கு தமிழக அரசு. இடம்: டாப்சிலிப், பொள்ளாச்சி.

07-10-2025 | 07:27


தாய்லாந்தின் சோன்புரியில் ஆண்டுதோறும் நடைபெறும் எருமை ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற இளைஞர்கள் தங்களது எருமைகளை வேகமாக ஓட்டிச் சென்றனர்.

07-10-2025 | 07:26


இந்திய கடலோர காவல் படை சார்பில், எண்ணெய் கசிவு பேரிடர் மற்றும் தீ விபத்தை கட்டுப்படுத்தும் ஒத்திகை சென்னை கடற்பகுதியில் நடந்தது. இதில் கடலோர காவல் படையின் 'சமுத்திரா பிரஹாரி' கப்பல், மற்றொரு கப்பலில் எரிந்த தீயை அணைக்க தண்ணீரை பீய்ச்சி அடித்தது.

07-10-2025 | 07:26


ஊட்டி தாவரவியல் பூங்காவில் இரண்டாம் சீசனுக்காக வைக்கப்பட்டுள்ள மலர் அலங்காரங்களை பார்த்து ரசிக்கும் சுற்றுலா பயணியர்.

07-10-2025 | 07:26


கடலூர் கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர் மற்றும் பிடிப்பட்ட பணம்.

07-10-2025 | 06:58


சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாமக நிறுவனர் ராமதாசை, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் சந்தித்து நலம் விசாரித்தார்.

06-10-2025 | 18:49


திருப்பூர், குமரன் சிலை முன் சி.ஐ.டி.யூ.,சார்பில் அனைத்து பிரிவு தொழிலாளர்களுக்கும் கூடுதல் போனஸ் வழங்கிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

06-10-2025 | 18:47