இன்றைய போட்டோ
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் பீரகுப்பம் இருளர் காலனியில் பழங்குடியின மக்கள் மின்சாரம், குடிநீர், சாலை வசதியில்லாமல் தவித்து வந்த குடியிருப்பில், தொகுதி எம்.எல்.ஏ., ஒரு நாள் இரவு தங்கி குறைகளை கேட்டறிந்தார். இதையடுத்து துறை அதிகாரிகள் அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
11-07-2025 | 01:55
மேலும் இன்றைய போட்டோ
பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் பருவ கால பணியாளர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இடம்: கோயம்பேடு
29-09-2026 | 21:54
வீரங்கால் ஓடையில் அதிக அளவில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை மற்றும் களிமண் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள்.இடம் : வேளச்சேரி
29-09-2026 | 21:54
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் உள்ள அனைத்து விசைப்படகு சங்கங்கள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
29-09-2026 | 21:54
தென்காசி மாவட்டம் வடகரை பகுதியில் அடவிநயினார் அணை அருகே விவசாய நிலத்திற்குள் புகுந்த 3 காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர்...
29-09-2026 | 21:54
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தாராபுரம் செல்வதற்காக கோவை விமான நிலையம் வருவதை ஒட்டி சித்ரா பகுதியில் இருந்து வழிநெடுக்க ரோட்டோரத்தில் போடப்பட்டுள்ள தடுப்புகள்.
29-09-2026 | 21:52