உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

13-07-2025 | 00:40


மேலும் இன்றைய போட்டோ

மேற்காசிய நாடான லெபனானின் தஹியோவில், இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலால் உருக்குலைந்த கட்டடம்.

16-03-2026 | 12:21


எரிபொருள் தட்டுப்பாடு அச்சத்தால், கடலுக்கு செல்லாமல் மீன்படி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள். இடம்: மங்களூரு, கர்நாடகா.

16-03-2026 | 12:20


உத்தரபிரதேசத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வில் பங்கேற்க வந்த தேர்வர்கள் வாரணாசி ரயில் நிலையத்திற்கு வெளியே படுத்து உறங்கினர்.

16-03-2026 | 12:20


பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் சமீபத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதில் சேதம் அடைந்த கோதுமை வயலை சோகத்துடன் பார்வையிட்ட விவசாயிகள்.

16-03-2026 | 12:19


பங்குனி பிரம்மோத்சவத்தின் 4ம் நாளில், காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள், ஸ்ரீ தேவி, பூ தேவியருடன், சேஷ வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.

16-03-2026 | 12:19


தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து மதுரை கே.கே.நகர் ஆவின் ரவுண்டானா பகுதியில் பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

15-03-2026 | 20:52


சென்னை மயிலாப்பூர் கோலவிழி அம்மன் கோவில் 1008 பால்குட திருவிழாவை முன்னிட்டு கபாலீஸ்வரர் கோவில் இருந்து கோலவிழி அம்மன் கோவில் வரை ஏராளமான பக்தர்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலம் சென்றனர்.

15-03-2026 | 18:06


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதால் வைப்பாறு மணற்பரப்பில் குழி தோண்டப்பட்டு அதில் வரும் ஊத்து தண்ணீரை குடிக்க எடுத்துச்செல்லும் அப்பகுதி மக்கள்.

15-03-2026 | 18:05


வால்பாறையில் உள்ள சோலையாறு அணையில், கோடை வெயிலின் தாக்கத்தினால் வேகமாக குறைந்து வருகிறது நீர்.

15-03-2026 | 08:24