இன்றைய போட்டோ
சென்னை நந்திகேஸ்வரர் தாள வித்யாலயா அமைப்பின் 30ம் ஆண்டு துவக்க விழா நடந்தது. இதில், ஸ்ரீ தியாக பிரம்ம கான சபை செயலர் ரகுநாதன், இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று, இசை கலைஞர்களை கவுரவித்தனர். இடமிருந்து: இசைக் கலைஞர்கள் 'நாதப்ரம்மம்' சுப்ரமணியன், ஏ.வி.மணிகண்டன், வயலின் வித்வான் பத்ரி நாராயணன், நந்திகேஸ்வரர் தாள வித்யாலயா நிறுவனர் தில்லைஸ்தானம், டாக்டர் சூரிய நாராயணன் மற்றும் தலைவர் மணிசங்கர் ராமசாமி. இடம்: காமாட்சி கல்யாண மண்டபம், குரோம்பேட்டை.
21-07-2025 | 04:30
மேலும் இன்றைய போட்டோ
விருத்தாசலம் நகராட்சியில் சேர்மன் சங்கவி முருகதாஸ் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
14-01-2026 | 09:19
தமிழகத்தில் கொண்டாடப்படும் உழவர் திருநாளான பொங்கல் பண்டிகை, வட மாநிலங்களில் மகர சங்கராந்தி என்ற பெயரில் அறுவடைத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வடகிழக்கு மாநிலமான திரிபுரா தலைநகர் அகர்தலாவில், வீட்டின் முன் பிரம்மாண்டமான வண்ணக்கோலமிட்ட பெண்.
13-01-2026 | 22:43
பொங்கல் பண்டிகையொட்டி திருநெல்வேலி மேலப்பாளையம் கால்நடை சந்தையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் ஆடுகள் விற்பனை நடந்தது.
13-01-2026 | 21:44
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது இதில் மாவட்ட கலெக்டர் பிரதாப் மாட்டு வண்டி ஓடி வந்தார்
13-01-2026 | 21:43
சென்னை மாநகராட்சி மலேரியா மற்றும் சுகாதாரத்துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இடம். எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே
13-01-2026 | 21:43
திருநெல்வேலி தூய சவேரியார் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் மாணவ - மாணவியர்கள் சார்பில் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை தலையில் சுமந்து கல்லூரியை சுற்றி வந்தனர்...
13-01-2026 | 21:42