உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

தென் அமெரிக்க நாடான சிலியில் உள்ள ஹம்பர்ஸ்டோன் எனப்படும் இந்த பாலைவன நகரம் 40 ஆண்டுகளுக்கு முன் வரை பரபரப்பாக காணப்பட்ட நிலையில், செயற்கை உரங்கள் வந்ததால் மக்கள் வெளியேறினர். தற்போது பேய் நகரம் என்று அழைக்கப்படும் இந்த இடம், நகரின் வரலாற்று முக்கியத்துவத்துக்காக தற்போது தேசிய நினைவுச்சின்னம் மற்றும் யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

21-07-2025 | 11:53


மேலும் இன்றைய போட்டோ

தமிழகத்தில் கொண்டாடப்படும் உழவர் திருநாளான பொங்கல் பண்டிகை, வட மாநிலங்களில் மகர சங்கராந்தி என்ற பெயரில் அறுவடைத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வடகிழக்கு மாநிலமான திரிபுரா தலைநகர் அகர்தலாவில், வீட்டின் முன் பிரம்மாண்டமான வண்ணக்கோலமிட்ட பெண்.

13-01-2026 | 22:43


பொங்கல் பண்டிகையொட்டி திருநெல்வேலி மேலப்பாளையம் கால்நடை சந்தையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் ஆடுகள் விற்பனை நடந்தது.

13-01-2026 | 21:44


திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது இதில் மாவட்ட கலெக்டர் பிரதாப் மாட்டு வண்டி ஓடி வந்தார்

13-01-2026 | 21:43


சென்னை மாநகராட்சி மலேரியா மற்றும் சுகாதாரத்துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இடம். எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே

13-01-2026 | 21:43


திருநெல்வேலி தூய சவேரியார் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் மாணவ - மாணவியர்கள் சார்பில் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை தலையில் சுமந்து கல்லூரியை சுற்றி வந்தனர்...

13-01-2026 | 21:42


திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழாவில் துப்பாக்கி சூடு போட்டியில் அரசு ஊழியர்

13-01-2026 | 21:42


திருநெல்வேலி தூய சவேரியார் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த மாதிரி காளையுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்ட மாணவியர் ...

13-01-2026 | 21:42


பொங்கல் விடுமுறைக்காக தங்கள் சொந்த ஊருக்கு படை எடுக்கும் பொதுமக்கள் இதனால் நீண்ட நேரம் வாகன நெரிசல் ஏற்பட்டது இடம்: கிளாம்பாக்கம்

13-01-2026 | 21:41


பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு செல்ல எழும்பூர் ரயில் நிலையத்தில் குவிந்த பயணிகள் கூட்டம்.

13-01-2026 | 21:40