இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாம் அதிபரும், அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலருமான டோ லாம், 3 நாள் அரசு முறை பயணமாக டில்லி வந்தார். அவரை நம் வெளியுறவுத்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் வரவேற்றார்.
06-05-2026 | 06:43
தமிழகத்தில் புதிய அரசு அமைய உள்ள நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் அறைகளை சுத்தம் செய்து, அங்கு இருந்த படங்கள் உள்ளிட்ட பொருட்களை அகற்றும் பணி மும்முரமாக நடந்தது.
06-05-2026 | 06:39
தவெக தலைவர் விஜய், அவரது கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு காரில் வந்த போது, சாலையின் இருபக்கதிலும் போலீசார் பாதுகாப்பிற்கு குவிக்கப்பட்டு இருந்தனர். இடம்: பனையூர், சென்னை.
06-05-2026 | 06:35
கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் வெயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெப்ப காற்றிலிருந்து தங்களை காத்துக்கொள்ள பொதுமக்கள் முகத்தையும், தலையையும் துணியால் மூடியபடி சாலையில் சென்றனர்.
03-05-2026 | 10:31
மதுரை சித்திரை திருவிழா தசாவதாரத்தில் பல்வேறு அவதாரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார் கள்ளழகர்.
03-05-2026 | 07:05
மஹாராஷ்டிராவின் மும்பை-புனே அதிவிரைவு சாலையில் செங்குத்தான மலைப்பகுதி அதிக போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதிகளை தவிர்த்து புனேவுக்கு விரைவாக செல்ல 13.3 கிமீ தூரத்துக்கு மிஸ்ஸிங் லிங் சாலை அமைக்கப்பட்டது. இதை அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் திறந்து வைத்தார்.
02-05-2026 | 07:45
தேனி மாவட்டம் தமிழக கேரளா எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்ய காத்திருந்த பக்தர்கள்.
01-05-2026 | 22:21