இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
ஊட்டியில் காலை நேரம் மழை பெய்யாத நிலையிலும், வேலிவியூ பள்ளத்தாக்கு பகுதியில் சூழ்ந்து காணப்பட்ட மேக மூட்டம் ஓவியம் போல் காட்சி அளித்தது.
17-09-2025 | 07:05
காசா நகரில் இஸ்ரேல் ராணுவம் தனது போர் நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக வடக்கு பக்கம் இருப்பவர்களை தப்பிச் செல்ல எச்சரிக்கை விடுத்ததையடுத்து, அங்கிருந்த மக்கள் வடக்கு காசாவில் இருந்து தெற்கு பகுதிக்கு வீடு, உடமைகளை துறந்து செல்கின்றனர்.
17-09-2025 | 06:59
இந்தோனேஷியா-ஜகார்த்தா புறநகர் பகுதிகளில் டெபெர்க் என்ற இடமும் ஒன்று. அங்கு பறவைகள் குறிப்பாக மகாவ் போன்ற வண்ணமயமான கிளிகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பது, பயிற்சி கொடுப்பது என்ற கலாசாரம் பிரபலமாக உள்ளது. படத்தில் இருக்கும் அல்பி அல்வார் ராம்லி போன்ற பறவைக் காதலர்கள், கிளிகளை சாகசங்கள் செய்யவும், கட்டளைகளை ஏற்கவும், மக்களுடன் பழகவும் பயிற்சி அளித்து அதன் மூலம் வருமானம் பார்க்கின்றனர்.
17-09-2025 | 06:59
ஜம்மு காஷ்மீரில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. இதனால், ஆப்பிள் உள்ளிட்ட சரக்குகளை காஷ்மீரில் இருந்து ஏற்றிச் சென்ற லாரிகள், நாள் கணக்கில் வரிசைக்கட்டி நிற்கின்றன.
17-09-2025 | 06:50
கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில், மீட்புப் பணிக்காக வந்த அகழ்வு இயந்திரம் சிக்கிக்கொண்டது. இடம்: டேராடூன், உத்தராகண்ட்.
17-09-2025 | 06:50
காட்டுமன்னார்கோவில் அருகே வீராணம் ஏரி முழு கொள்ளளவு நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது.
16-09-2025 | 13:45
நம் அண்டை நாடான நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடந்த போராட்டத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். அரசு சிவில் விமானப் போக்குவரத்து துறையின் கட்டடத்துக்கு தீ வைக்கப்பட்டதில் எரிந்து கருகிய வாகனங்களில் ஒரு பகுதி.
16-09-2025 | 11:03