உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் வைப்பதற்காக தயாராக உள்ள வண்ண விநாயகர் சிலைகள்.இடம்: திருநெல்வேலி.

26-08-2025 | 07:28


மேலும் இன்றைய போட்டோ

பதவி இருந்தால் தான் செயல்பட முடியும்!- சரத்குமார். உங்களது கருத்தை படத்தை பார்த்து கமென்ட் செய்யுங்கள் வாசகர்களே!

24-03-2026 | 08:11


சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக வேட்பாளர்களின் நேர்காணல் முடிவடைந்த நிலையில், தொகுதிகள் ஓட்டு சேகரிக்க தலையில் உதயசூரியன் தொப்பி அணிந்து புறப்பட்ட திமுக தொண்டர் வடிவேல்.

24-03-2026 | 08:07


பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின் 2ம் நாளில், ஏலவார்குழலியுடன் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சூரிய பிரபையில் உலா வந்தார்.

24-03-2026 | 07:57


மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக துவங்கியது. சிறப்பு அலங்காரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த கபாலீஸ்வரர் உடனுறை கற்பகாம்பாள்.

24-03-2026 | 07:54


ஜம்முவின் புறநகர்ப் பகுதியில் ஓடும் தாவி ஆற்றின் அருகே அமைக்கப்பட்டு உள்ள தேனீ வளர்ப்பு மையத்தில், பெண் தொழிலாளர் ஒருவர் தேனீப் பெட்டிகளை ஆய்வு செய்தார். இப்பகுதியில் நிலவும் இதமான தட்பவெப்பநிலை மற்றும் பூத்துக் குலுங்கும் மலர்களால் தேன் உற்பத்தி அதிகரித்துள்ளது.

24-03-2026 | 07:49


தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் வாராந்திர குறைகேட்பு மனுக்களை பெட்டியில் போடுகின்றனர். இடம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகம்.

23-03-2026 | 22:45


சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநகராட்சி சார்பில் பேருந்து நிறுத்தங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள்.இடம் : ஆழ்வார்பேட்டை

23-03-2026 | 22:44


திருப்பூரில், மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் தொகுதிகளுக்கு அனுப்புவது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

23-03-2026 | 22:44


சென்னை எலியட்ஸ் கடற்கரையில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் வகையில் மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து வைக்கப்பட்டுள்ள மின்சார சார்ஜிங் நிலையம்.இடம் : பெசன்ட் நகர்

23-03-2026 | 22:44