இன்றைய போட்டோ
கிழக்காசிய நாடான வட கொரியா, ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு அமெரிக்கா உட்பட பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் அதைப்பற்றி அந்த நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் கவலைப்படுவதில்லை. இந்நிலையில், புதிய ஆயுதத் தொழிற்சாலை துவக்கப்பட்டுள்ளதாகவும், அதை அதிபர் பார்வையிட்டதாகவும் வடகொரியா அரசு படங்களை வெளியிட்டுள்ளது. ஆனால், எது எங்கு உள்ளது, என்னென்ன ஆயுதங்கள் தயாரிக்கப்படுகிறது என்ற தகவல் வெளியிடப்படவில்லை.
01-09-2025 | 22:26
மேலும் இன்றைய போட்டோ
ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு, தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.
27-06-2026 | 17:56
ம.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள். இடம்: விஜய்ஸ்ரீ மஹால், அண்ணா நகர்.
27-06-2026 | 17:55
புதுச்சேரி தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் பைபர் படகில் சென்ற மீனவர்கள் வலையில் சிக்கிய அதிக அளவிலான மீன்கள்.
27-06-2026 | 17:54
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு சிறப்பு சந்தன அபிஷேகம் நடந்தது.
27-06-2026 | 17:52
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு தீபாதாரணை நடந்தது.
27-06-2026 | 17:51
சென்னையின் அடையாறு ஆறு கடலில் கலக்கும் இடத்தில் கூட்டமாக இரை தேடி குவிந்துள்ள கூழைக்கிடா, மஞ்சள் மூக்கு நாரை மற்றும் பறவைகள். இடம் : பெசன்ட் நகர்
27-06-2026 | 17:51
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
26-06-2026 | 10:23