உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

தஞ்சாவூர் அருகே, தண்ணீர் நிரம்பி இருக்கும் சமுத்திரம் ஏரி.

03-09-2025 | 08:23


மேலும் இன்றைய போட்டோ

பசும்பொன் தேவர் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மரியாதை செலுத்தினார்.

30-10-2025 | 14:50


பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.

30-10-2025 | 10:28


குடும்பம், குட்டிகளோட நாங்க பாட்டுக்கு எங்க ஏரியாவுல சுத்தறோம். எங்கள யாரும் தொந்தரவு பண்ணாம இருந்தா, நாங்களும் சமத்தா இருப்போம்… என்பது போல எஸ்டேட் பகுதியில், பகல் நேரத்திலேயே குட்டிகளுடன் உலா வந்த யானைகள். இடம்:சிறுகுன்றா எஸ்டேட், வால்பாறை.

30-10-2025 | 09:44


கடவுளின் தேசத்தில் கண்களுக்கு பசுமை தரும் வயல்வெளி, மிதமான மழையால் நெல் மகசூலுக்கு தயாராகி வருகிறது. இடம்: பந்தலூர் அருகே வயநாடு, கேரளா.

30-10-2025 | 09:41


ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்தில் கண்காட்சிக்கு அழைத்து வரப்பட்ட 16 அங்குல உயரம் உடைய புங்கனூர் பசு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

30-10-2025 | 09:36


இடுக்கி அணையின் ஒரு பகுதியான செருதோணி அணையில் ஒரு புறம் தண்ணீரும், அதற்கு ஏற்ப மறுபுறம் மேகங்கள் சூழ்ந்தும் ரம்மியமாக காட்சி அளிக்கிறது.

30-10-2025 | 09:27


திருச்சி மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச் செல்ல லாரிகள் வராததால், உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடை கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளாகவும், குவியலாகவும் தேங்கி கிடக்கிறது.

30-10-2025 | 09:23


தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

30-10-2025 | 09:15


பெரிய காஞ்சிபுரம் நெமந்தகார தெரு, பழனி கோவிலில் கந்தசஷ்டி விழாவின் நிறைவாக ஊஞ்சல் சேவை உத்சவத்தில் முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

30-10-2025 | 08:25