இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
முதுமலை அருகே மசினகுடி வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகளில் மழையின் காரணமாக தண்ணீர் அதிகரித்துள்ளதால், வன உயிரினங்களுக்கான குடிநீர் தேவை பூர்த்தியாகி உள்ளது.
01-10-2025 | 07:53
பாலக்காடு, கொடுந்திரப்புள்ளி அக்ரஹாரம் ஐயப்பன், பெருமாள் கோவில்களில் துர்காஷ்டமி நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு, செண்டை மேளம் முழங்க யானைகளின் காழ்ச்ச சீவேலி அணிவகுப்பு நடந்தது.
01-10-2025 | 07:53
திருத்தணி முருகன் கோவிலில் நடந்து வரும் நவராத்திரி விழாவில் உற்சவர் கஜலட்சுமி அம்மன் அலங்காரத்தில் அன்ன வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
01-10-2025 | 07:27
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள லலித் கலா அகாடமியில், போன்சாய் மரங்களின் மூன்று நாள் கண்காட்சி நடைபெறுகிறது. கண்காட்சியை சென்னையில் உள்ள ஜப்பானிய தூதர் தகாஹாசி முனியோ தொடங்கி வைத்து போன்சாய் மரங்களை பார்வையிட்டார்.
01-10-2025 | 07:26
வட மாநிலங்களில் துர்கா பூஜை பண்டிகையின் ஒரு பகுதியாக, குமாரி பூஜை நிகழ்ச்சி நடைபெறும். அப்போது சிறுமியரை துர்க்கையின் அவதாரமாக கருதி வழிபடுவர். மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் நடந்த குமாரி பூஜையில், சிறுமியரை அலங்கரித்து அமர வைத்து பூஜை செய்த மக்கள்.
01-10-2025 | 07:26
கர்நாடக மாநிலம், சிருங்கேரியில் நடந்த நவராத்திரி உற்சவத்தில், சுப்ரீம் கோர்ட் நீதிபதி நரசிம்மா, சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதி தீர்த்த சுவாமிகளை தரிசனம் செய்து ஆசி பெற்றார்.
01-10-2025 | 07:26
கோவை ரேஸ்கோர்ஸ் ஸ்ரீ சாரதாலயம் கோவிலில் நவராத்திரி விழாவை ஒட்டி சிம்மவாஹினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த அம்பாள்.
30-09-2025 | 12:39