இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில், வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் வண்ணமயமான கோலங்கள் வரையப்பட்டன.
19-03-2026 | 09:41
ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் கடலில் மிதந்த பிஎஸ்எல்வி ராக்கெட்டின் உதிரி பாகத்தை மரைன் போலீசார் மீட்டனர். இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில், 600 கிலோ எடை கொண்ட எரிபொருள் டேங்க் என்பது தெரிந்தது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
19-03-2026 | 09:38
சென்னை பிராட்வேயில் உள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கல்லூரி மாணவிகள் யுகாதி பண்டிகையை விளக்கேற்றி கொண்டாடினர்.
18-03-2026 | 23:05
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
18-03-2026 | 23:04