உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கரூரில் நடந்த தவெக கட்சி பேரணியில் தலைவர் விஜய் பங்கேற்றார். இவரை காண திரண்ட கூட்டத்தில் பெரும் நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

28-09-2025 | 08:06


மேலும் இன்றைய போட்டோ

திருப்பூரில், சாய் கிருஷ்ணா நுண்கலைக் கூடம் சார்பில், அருணாச்சல கவிராயரின் ராம நாட்டிய நாடகம் அரங்கேற்றம் ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நடந்தது.

03-10-2025 | 08:08


கோவை பூ மார்க்கெட் பகுதியில் இருந்து ராஜவீதி ராமலிங்க சவுடாம்பிகை அம்மனுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் கத்தி போடும் திருவிழா நடந்தது.

03-10-2025 | 07:47


தசரா, ஆயுத பூஜை காரணமாக, ஊட்டிக்கு வந்த சுற்றுலா வாகனங்கள் தலைகுந்தா பகுதியில் பல மணி நேரம் அணி வகுத்து நிற்பதால் உள்ளூர் போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க போதிய தொலை நோக்கு திட்டங்கள் அவசியமாக உள்ளது.

03-10-2025 | 07:46


விஜயதசமி நாளான திருமணமான பெண்கள் துர்கையை வணங்கி, குங்குமம் பூசி, ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக்கொள்ளும், சிந்தூர் கேலா நிகழ்வு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இடம்: குவஹாத்தி, அசாம்.

03-10-2025 | 07:29


விழுப்புரத்தில் தினமலர் - பட்டம் இதழ் சரஸ்வதி சென்ட்ரல் சிபிஎஸ்இ பள்ளி வி.பாளையத்தில் இணைந்து நடத்திய வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்க ஆர்வமுடன் வந்தனர்.

02-10-2025 | 15:23


மகாத்மா காந்தியின் பிறந்தநாள் முன்னிட்டு சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு கீழ் வைக்கப்பட்ட படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

02-10-2025 | 15:17


விஜயதசமியை முன்னிட்டு தினமலர் நாளிதழ் சார்பில் குழந்தைகளுக்கு "அ"னா "ஆ"வன்னா எழுத கற்றுத்தரும் அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி மதுரை இம்மையில் நன்மை தருவார் கோவிலில் நடந்தது.

02-10-2025 | 10:47


தாயின் அரவணைப்பை விட சிறந்த பாதுகாப்பு எதுவுமில்லை என்பது போல, குட்டிகளை அணைத்து கூட்டு குடும்ப உன்னதத்தை உணர்த்தும் குரங்கு குடும்பம். இடம்: ஆழியாறு ரோடு.

02-10-2025 | 10:16


ஊட்டியில் காலையில் வெயிலான காலநிலை நிலவி வந்த நிலையில், கேத்தி பள்ளதாக்கு பகுதியின் பசுமையான தோற்றம் பயணிகளை பரவசப்படுத்தியது.

02-10-2025 | 10:16