இன்றைய போட்டோ
காசியில் ஓடும் கங்கை நதியின் பல்வேறு படித்துறைகளில் அஸ்ஸி காட் எனப்படும் புனிதமான படித்துறையும் ஒன்று. கடந்த மாதம் கங்கையில் பொங்கி வந்த வெள்ளம் அஸ்ஸி காட் உள்ளிட்ட அனைத்து படித்துறைகளையும் மண் குவியலாக்கிவிட்டது. வரவிருக்கும் திருவிழாவினை முன்னிட்டு ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளை சுத்தம் செய்து வருகின்றனர்.
08-10-2025 | 07:51
மேலும் இன்றைய போட்டோ
ஆரணியில் பகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் செய்த இபிஎஸ்
04-04-2026 | 22:08
திருவண்ணாமலை அடுத்த பண்டிதப்பட்டு பகுதியில், தேர்தலில் 100% வாக்களிப்பதை வலியுறுத்தி, தேர்தல் நாளில் வாக்களிக்க வேண்டும் என்ற ஜனநாயகத் திருவிழா அழைப்பிதழை கலெக்டர் தர்ப்பகராஜ், முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு வழங்கினார்
04-04-2026 | 22:07
திண்டுக்கல்லில் நடந்த அ.தி.மு.க., வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் புதிய நீதிக் கட்சி நிறுவனத்தலைவர் சண்முகம் பேசினார்.
04-04-2026 | 22:01
விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அதிமுக பொது செயலாளர் இபிஎஸ் கொட்டும் மழையில் பேசினார்.
04-04-2026 | 22:00