உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

ஊட்டியில் பகல் நேரங்களில் கடும் மேகமூட்டம் நிலவிய நிலையிலும், சூட்டிங் மட்டம் பகுதியில் இயற்கை சூழலை ரசித்த வண்ணம் நின்றிருந்த சுற்றுலா பயணிகள்.

10-10-2025 | 08:33


மேலும் இன்றைய போட்டோ

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனின் ஒடெசாவில், ரஷ்ய ராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலில், சேமிப்பு கிடங்கு ஒன்றின் அருகே நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரிகளில் பற்றி எரிந்த தீ.

10-10-2025 | 07:53


போர் நிறுத்தத்திற்கான அமைதி திட்டத்தின் முதல் கட்டத்தை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஒப்புக்கொண்டதையடுத்து, மத்திய காசா பகுதியின் டியர் அல்பலாஹ் நகரில் அல் அக்ஸா மருத்துவமனைக்கு வெளியே பாலஸ்தீனர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் ஒருவர் தன் குழந்தையை தூக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

10-10-2025 | 07:51


இமயமலையில் அமைந்துள்ள உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில், உள்ள கேதார்நாத் கோவிலை சுற்றி தற்போது பனி சூழ்ந்து ரம்மியமான சூழ்நிலை நிலவுகிறது. இந்த இதமான சூழலில் தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்.

10-10-2025 | 07:46


வழக்கம் போல வாழைத்தார் தப்பவில்லை...இடம்: கோவை அவினாசி ரோடு புதிய மேம்பாலம் திறப்பு விழாவில்

09-10-2025 | 19:39


கோவை குறிச்சி சிட்கோ தொழில்பேட்டையில் புதிதாக கட்டப்பட உள்ள தங்க நகை பூங்காவின் மாதிரி வரைபடம்.

09-10-2025 | 19:12


விருத்தாசலத்தில் இருந்து கிராமப்புறங்களுக்கு செல்லும் அரசு நகர பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

09-10-2025 | 18:04


கோவை அவிநாசி ரோட்டில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை, 10.1 கி.மீ. துாரத்துக்கு ரூ.1,791.23 கோடியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.

09-10-2025 | 12:33


கோவை கணபதி பகுதியில் யு டேர்ன் வசதி அகற்றப்பட்டதால், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது.

09-10-2025 | 07:58


ஹிமாச்சலில் கடும் பனிப்பொழிவு காரணமாக, லாஹூல்- ஸ்பிட்டி மாவட்டத்தில் உள்ள மணாலி - லே தேசிய நெஞ்சாலை மூடப்பட்டுள்ளதால், வாகனங்கள் வரிசைக்கட்டி நின்றன.

09-10-2025 | 07:51