இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
நச்சுத்தன்மை உடைய இருமல் மருந்தை குடித்து குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தால் நாடே கலங்கிப்போயிருக்கிறது. ஆனால் இப்போது தான் மருந்தாய்வாளர்கள் மருந்துகளின் தரத்தை ஆய்வு செய்வதில் மும்முரம் காட்டி வருகின்றனர். இடம்: சிந்த்வாரா, மத்திய பிரதேசம்
12-10-2025 | 08:38
திருநெல்வேலியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் உள்ள காவல்கிணறு பகுதி, காற்றாலை நகரம் போல காட்சி அளிக்கிறது. அங்கு உயரமான காற்றாலைகள், சுழலும் வெள்ளை இறகுகள் ஒன்றிணைந்து தனித்துவமான இயற்கை காட்சியை உருவாக்குகின்றன.
12-10-2025 | 07:12
ஜம்மு காஷ்மீரின் புகழ்பெற்ற போக்ரிபால் ஏரியில், படகு போட்டி நடந்தது. இதில் ஆர்வமுடன் பங்கேற்ற போட்டியாளர்கள். இடம்: ஸ்ரீநகர்.
12-10-2025 | 07:11
கோவை ஒப்பணக்கார வீதியில் களை கட்டிய தீபாவளி பர்சேஸ், விற்பனைக்கு உள்ள குழந்தைகளுக்கான கைக்கடிகாரங்கள்.
11-10-2025 | 20:10
உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடந்தது.
11-10-2025 | 13:11
தீபாவளி பண்டிகை நெருங்குவதை யொட்டி சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் விதவிதமான அகல் விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளது.
11-10-2025 | 13:11