உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சென்னை தலைமை செயலகத்தில் நடக்கும் சட்டசபை கூட்டத்தை காண வந்த சட்டக்கல்லூரி மாணவர்கள், தாங்கள் அணிந்து வந்த கருப்பு நிற உடைகளை கழற்றி வைத்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

17-10-2025 | 07:05


மேலும் இன்றைய போட்டோ

துறைமுகத்தில் கலர்கலராய் கன்டெய்னர் டப்பாக்களை அடுக்கி வைத்துள்ளனரோ என்று கருத வேண்டாம். கட்டடங்களுக்கு மத்தியில் மீனாட்சி அம்மன் கோபுரங்களும், ஒத்தக்கடை யானைமலையும் ஒன்றாய் சேர்ந்து பருந்து பார்வையில் 'கண்ணுக்கு விருந்தாய்' கேமராவில் பதிவாகியுள்ளது. இடம்: மதுரை பசுமலை.

21-10-2025 | 08:02


தீபாவளியையொட்டி ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் மார்க்கெட்டில், பட்டாசு கடைகளில், ராணுவ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

21-10-2025 | 07:59


தீபாவளி பண்டிகையையொட்டி உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள ராமர் கோயில் மின் விளக்குகளால் ஜொலித்தது.

21-10-2025 | 07:57


தீபாவளி பண்டிகையான நேற்று கர்நாடகாவின் சிக்கமகளூரு தேவிரம்மா மலையில் அமைந்துள்ள தேவிரம்மா கோயிலுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக நடந்து சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

21-10-2025 | 07:56


ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா பிரதான புல்தரை மைதானத்தில் சுற்றுலா பயணியர் இதமான காலநிலையை ரசித்தவாறு ஆடி, பாடி மகிழ்ந்தனர்.

21-10-2025 | 07:53


தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை முழுவதும் இரவில் வெடிக்கப்பட்ட வண்ணமயமாக வாண வேடிக்கைகள்.இடம்: தங்க சாலை.

21-10-2025 | 05:29


டில்லியில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்த பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.

20-10-2025 | 22:07


ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்த பிரதமர் மோடி, தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். இடம்: ஜனாதிபதி மாளிகை, டில்லி.

20-10-2025 | 17:54


தீபாவளியை முன்னிட்டு மதுரையின் அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் மற்றும் அனுஷத்தின் அனுக்கிரகம் சார்பில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை நிறுவனர் நெல்லை பாலு வழங்கினார்.

20-10-2025 | 16:22