உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

இங்கே ஏதோ தண்ணீர் பைப் உடைந்து விட்டது என நினைக்க வேண்டாம் ... கோவை ஆவாரம்பாளையம் ரோட்டிலுள்ள ராமகிருஷ்ணா பள்ளியில் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் செய்த தீ தடுப்பு ஒத்திகை தான் இது.

17-10-2025 | 19:59


மேலும் இன்றைய போட்டோ

திருவள்ளூர் அடுத்த பூண்டி நீதேக்கத்தில் நிரம்பியதால் உபரி நீர் திறக்கப்பட்ட தண்ணீர் தாமரைப்பாக்கம் அணைக்கட்டு வழியாக சீறிப்பாய்ந்து கடலுக்குச் செல்கிறது

17-10-2025 | 19:59


திருநெல்வேலி மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

17-10-2025 | 19:59


திருநெல்வேலியில் பலத்த மழையினால் டவுன் சுந்தரர் தெருவில் வீடு இடிந்து விழுந்தது.

17-10-2025 | 19:58


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தேனியில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

17-10-2025 | 19:57


மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழையினால் தாமிரபரணி ஆற்றில் வழக்கத்தைவிட அதிகமான அளவு தண்ணீர் செல்கிறது.இடம்: குறுக்குத்துறை முருகன் கோவில், திருநெல்வேலி.

17-10-2025 | 19:57


திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் எதிரில் உள்ள சித்தா மருத்துவமனை வளாகத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் சேலம் வழியாக செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டிருந்தது.

17-10-2025 | 19:57


மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழையினால் தாமிரபரணி ஆற்றில் வழக்கத்தைவிட அதிகமான அளவு தண்ணீர் செல்கிறது.இடம்: குறுக்குத்துறை முருகன் கோவில்

17-10-2025 | 19:56


தீபாவளி பண்டிகை முன்னிட்டுசொந்த ஊர் செல்வதற்காக சென்னை கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குவிந்த மக்கள் கூட்டம்.

17-10-2025 | 19:56


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊருக்கு செல்வதால் ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் வாகன ஓட்டிகள். இடம்: கிளாம்பாக்கம்

17-10-2025 | 19:56