உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

புதிதாக விருந்தினர் மாடம் கட்ட திட்டமிட்டுள்ளார் டிரம்ப். இதற்காக அதிபரின் வெள்ளை மாளிகையின் ஒரு பகுதியை இடிக்கும் பணி துவங்கி உள்ளது. இடம்: வாஷிங்டன், அமெரிக்கா.

23-10-2025 | 12:10


மேலும் இன்றைய போட்டோ

ஐரோப்பிய நாடான ஜெர்மனியை சேர்ந்த மைக்கேல் புரோயேலிச் என்பவர் 2000ம் ஆண்டில் 50வது பிறந்த நாளை கொண்டாடினர். வித்தியாசமாக ஏதாவது செய்ய நினைத்தவர் தான் பிறந்த ஆண்டில் தயாரிக்கப்பட்ட 50 கார்களை வாங்கினார். அவற்றை தன் வீட்டுக்கு அருகில் உள்ள வனப்பகுதியில் நிறுத்தி வைத்துள்ளார். இந்த பகுதி பழைய வாகனங்களின் சமாதி என்று அழைக்கப் படுகிறது.

23-10-2025 | 12:15


திருவள்ளூர் அடுத்த பூண்டி நீர்த்தேக்கத்தில் நிரம்பியதால் உபரி நீர் திறக்கப்பட்டது.

23-10-2025 | 10:32


சென்னை மெரினா கடற்கரையில் கடல் மேற்பரப்பில் பொங்கியெழும் நுரையில் நடந்து செல்லும் இளைஞர்.

23-10-2025 | 06:34


வெயிலுடன் மழை பெய்யும் போது, வானில் ஏற்பட்ட வானவில்லின் வர்ணஜாலம். இடம்: வத்தலகுண்டு, திண்டுக்கல் மாவட்டம்.

23-10-2025 | 06:29


சென்னை பாரிமுனையில் சட்டக் கல்லூரி இருந்த 134 ஆண்டு பழமையான கட்டிடம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

23-10-2025 | 04:42


மழை காரணமாக விழுப்புரம் புதிய பஸ் நிலையம் கடல் போல் காட்சி அளிக்கிறது

22-10-2025 | 18:42


புதுச்சேரி பாகூர் பகுதியில் வடிகால் வசதி இல்லாததால் நெல் பயிர்களை மழைநீர் சூழ்ந்தது.

22-10-2025 | 18:41


புதுச்சேரியில் பெய்த கனமழையால் கைக்கிலப்பட்டு கிராமத்தில் நெல் பயிர் மூழ்கியதை காண்பிக்கும் விவசாயிகள்.

22-10-2025 | 18:41


புதுச்சேரியில் பெய்த கனமழையால் கைக்கிலப்பட்டு சங்கராபரணி ஆறு படுகை அணை நிரம்பி வழிகிறது.

22-10-2025 | 18:41