உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கோமுகி அணை திறக்கப்பட்டதால் விருத்தாசலம் மணி முத்தாற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

23-10-2025 | 14:43


மேலும் இன்றைய போட்டோ

மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.சுந்தருக்கு, தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் நடந்த பாராட்டு விழாவில், அவருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

23-10-2025 | 21:04


கடமை கண்ணியம் கட்டுப்பாடு ஓய்வில்லா போலீசாருக்கு மிக அவசியம். இடம்: புதுச்சேரி காமராஜ் சாலை.

23-10-2025 | 14:42


பொள்ளாச்சி நகராட்சி மினி ஸ்டேடியம் பணிகளை கூடுதல் கலெக்டர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

23-10-2025 | 14:42


தினமலர் நாளிதழ் மற்றும் எஸ்.என்.எஸ். கல்வி குழுமம் இணைந்து வழங்கும் பதில் சொல் - பரிசை வெல் வினாடி வினா போட்டி, பொள்ளாச்சி கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் பரிசு பெற்ற மாணவர்களுடன் (இடமிருந்து) ஆசிரியர் அபிராமி, முதல்வர் பிரகாஷ், ஆசிரியர் அகிலா உள்ளிட்டோர்.

23-10-2025 | 14:41


உக்ரைனின் கார்கிவ் பகுதியில் உள்ள மழலையர் பள்ளி மீது ரஷ்யா ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது. அதில் இருந்த 50 குழந்தைகளும் மீட்பு படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

23-10-2025 | 12:19


ஐரோப்பிய நாடான ஜெர்மனியை சேர்ந்த மைக்கேல் புரோயேலிச் என்பவர் 2000ம் ஆண்டில் 50வது பிறந்த நாளை கொண்டாடினர். வித்தியாசமாக ஏதாவது செய்ய நினைத்தவர் தான் பிறந்த ஆண்டில் தயாரிக்கப்பட்ட 50 கார்களை வாங்கினார். அவற்றை தன் வீட்டுக்கு அருகில் உள்ள வனப்பகுதியில் நிறுத்தி வைத்துள்ளார். இந்த பகுதி பழைய வாகனங்களின் சமாதி என்று அழைக்கப் படுகிறது.

23-10-2025 | 12:15


புதிதாக விருந்தினர் மாடம் கட்ட திட்டமிட்டுள்ளார் டிரம்ப். இதற்காக அதிபரின் வெள்ளை மாளிகையின் ஒரு பகுதியை இடிக்கும் பணி துவங்கி உள்ளது. இடம்: வாஷிங்டன், அமெரிக்கா.

23-10-2025 | 12:10


திருவள்ளூர் அடுத்த பூண்டி நீர்த்தேக்கத்தில் நிரம்பியதால் உபரி நீர் திறக்கப்பட்டது.

23-10-2025 | 10:32


சென்னை மெரினா கடற்கரையில் கடல் மேற்பரப்பில் பொங்கியெழும் நுரையில் நடந்து செல்லும் இளைஞர்.

23-10-2025 | 06:34