இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
ஒரு கிலோ தக்காளி விலை 15 ரூபாய்க்கும் கீழே சென்றதால், விரக்தியில் திருச்சி காவிரியாற்றில் விவசாயிகள் 2 டன்னுக்கும் மேற்பட்ட தக்காளிகளை கொட்டினர்.
30-10-2025 | 08:08
ஆசிய இளையோர் கபடி போட்டியில், தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் அபினேஷூக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி 1 லட்சம் ரூபாய் வழங்கி பாராட்டு தெரிவித்தார். அருகில் அபினேஷின் தாய் தன லட்சுமி, அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ். இடம்: சென்னை.
30-10-2025 | 08:05
தென்காசியில் நடந்த அரசு விழாவிற்கு சென்ற முதல்வர் ஸ்டாலினை கழுநீர் குளம் என்ற இடத்தில் சிலம்பம் சுழற்றி சிறுவர்கள் வரவேற்றனர். அவர்களுடன் சேர்ந்து, தானும் சிலம்பம் சுற்றி மகிழ்ந்தார் ஸ்டாலின்.
30-10-2025 | 07:56
காஞ்சி, கோவிந்தவாடி ஏரி நிரம்பியதால், நாணல் புற்கள் மூழ்கியது. உயர்மின் கோபுர மின் கம்பங்களில் குஞ்சு பொரித்து வரும் நீர்க்கோழிகள். பிள்ளையைப் பெற்று வளர்த்து ஆளாக்குவதற்குள் எந்த தாய்க்கும் சிரமம் தான். 2வது படம்; தண்ணீரில் மூழ்குவதற்கு முன் காணப்பட்ட நாணல்.
30-10-2025 | 07:32
தென்காசியில் நடந்த அரசு விழாவில் பங்கேற்பவர்களை அழைத்து செல்ல அரசு பஸ்கள் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் பாதிக்கப்பட்டனர்.
30-10-2025 | 03:12
திருவள்ளூர் அடுத்த பூண்டி நீர்த்தேக்கத்தில் தண்ணீர் நிரம்பியதால் உபரி நீர் திறந்த இடத்தில் வலை விரித்து மீன் பிடிக்கும் அப்பகுதி வாசிகள்
29-10-2025 | 15:34