உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

வடகிழக்கு மாநிலமான அசாமின் குவஹாத்தியில் 93வது விமானப்படை தினம் விரைவில் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, நடந்த விமான சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகையில் ஈடுபட்ட நம்வீரர்கள், மூவர்ண கொடியின் வண்ணத்தை வானில் வரைந்து பார்வையாளர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

09-11-2025 | 07:13


மேலும் இன்றைய போட்டோ

சுரைக்காய்க்கு உப்பு இல்லை என்பது பழமொழி. குறைந்தபட்ச விலையும் இல்லாததால், சுரைக்காயை பறிக்காமல் தோட்டத்திலேயே விட்டு விட்டனர் விவசாயிகள். இடம்: மானூர், திருநெல்வேலி மாவட்டம்.

09-11-2025 | 07:17


கடந்த இரண்டு மாதங்களாக, பறவை காய்ச்சல் காரணமாக மூடப்பட்டிருந்த டில்லி தேசிய உயிரியல் பூங்கா, பொதுமக்கள் பார்வைக்கு மீண்டும் திறக்கப்பட்டது. பூங்காவில் உள்ள குளத்தில் இரண்டு பெலிக்கன் பறவைகள் மீன்களை வேட்டையாடி பசி தீர்த்துக்கொண்டன.

09-11-2025 | 07:09


கிறிஸ்மஸ் பண்டிகையொட்டி சென்னை எழும்பூர் போர்டெல் ஹோட்டலில் 100 கிலோ எடையுள்ள பிளம் கேக் கலவை தயாரிக்கும் பணி துவங்கியது. இதில் வைகை ஹோட்டல் குழுமம் இயக்குனர் சித்தார்த்.தினமலர் முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி கல்பலதா.

08-11-2025 | 18:05


ஊட்டி படகு இல்லத்திற்கு, எராளமான சுற்றுலா பயணிகள் , படகு சவாரி சென்றனர்.

08-11-2025 | 15:19


கார்த்திகை தீபத்தை ஒட்டி வெளி மாநிலத்திற்கு அனுப்புவதற்காக விருத்தாசலம் செராமிக் தொழில்பேட்டையில் அகல் விளக்குகள் தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.

08-11-2025 | 15:18


கோவைப்புதூர் ஏ கிரவுண்ட் மைதானத்தில் நடந்த சைக்கிள் போலோ மாவட்ட அணி தேர்வு போட்டியில் தன் திறமையை வெளிப்படுத்திய மாணவிகள்.

08-11-2025 | 15:17


கோவை வந்த எர்ணாகுளம் - பெங்களூர் வரை செல்லும் வந்தே பாரத் ரயில்.

08-11-2025 | 14:57


திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே அதிகளவில் பயிரிடப்பட்டுள்ள வாடாமல்லி பூக்கள் ரம்மியமாக காட்சியளிக்கின்றது.

08-11-2025 | 13:48


ராணுவ தலைமை தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, டில்லியில் இன்று துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

08-11-2025 | 13:16